Hot Posts

6/recent/ticker-posts

ஆரைக்கீரையும் அதன் நன்மைகளும் 1/40

 நமது பொதிகை வலைதளத்தில் நாற்பது நாட்களில் நாற்பது வகையான கீரைகளை பற்றியும் அதன் பயன்களை பற்றியும் தொடராக பதிவிட ஆறிவித்திருந்தோம். அதன்படி முதல் கீரையாக இன்று எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் அதி அற்புதமான பயன்களை கொண்ட ஆரைக்கீரையை பற்றி பார்ப்போம். சில நிமிடங்கள் ஒதுக்கி கவனமாக படியுங்கள்.

கிராமங்களில் சில புதிர்களை அடிக்கடி சொல்லி, சிறுவர்களிடம் அதன் பதிலைக் கேட்பார்கள், புதிர்களின் காரணம், புதிர்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, அவர்கள் மனதில் நன்கு இருத்திக்கொள்ளவே. அது போல ஒரு புதிரை, இங்கே நாம் பார்க்கலாமா!?



 "நாலு கீத்தில் ஒரு பந்தல்அதுக்கு ஒரே கால்அது என்ன?

பந்தலுக்கு எப்படி ஒரே கால் என்று நிறைய யோசித்து, இருக்கும் பல்வேறு சிந்தனைகளில், இதையும் சேர்த்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம். மேலே இருக்கும் படத்திலேயே, இதற்கான விடை இருக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்களா

நீராரைக்கீரை
, ஆலக்கீரை எனும் ஆரைக்கீரை தான், புதிருக்கான பதில். நான்கு கால்வட்ட இலைகளைத் தாங்கி நிற்கும் தண்டுகள் நிறைந்துள்ள ஆரைக்கீரை, ஆரை இனத்தில் கொடி போன்ற ஒரு கீரை வகைச்செடியாகும். மூன்று இலைகள் கொண்ட புளியாரை மற்றும் ஓரிலை கொண்ட வல்லாரை இதன் மற்ற வகைகளாகும். இதில், வல்லாரை தேவ மூலிகை, ஆற்றல்மிக்க காய கற்ப மூலிகையும் கூட.

நீர்ப்பாங்கான
வயல்வெளிகளில், நெற்பயிர்களைவிட வேகமாக, வளமாக வளரும் ஒரு களைச்செடியாக, ஆரைக்கீரையைக் கருதினாலும், அவை அதி சிறப்புமிக்க, மனித உடல் நலம் காக்கும் ஒரு அரிய மூலிகையாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் தினமும் ஒரு கீரை அவசியம் இருக்கும், அதிலும் கிராமங்களில் உள்ள வீடுகளில், நகரங்களில் கிடைக்காத ஆரைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முடக்கத்தான், பொன்னாங்கன்னி மற்றும் பண்ணைக்கீரை போன்ற கீரைகள் தினமும் உணவில் இடம்பெற்றிருக்கும். அந்தக் கீரைகள் எல்லாம், உடலுக்கு தேவையான ஆற்றலை, சத்துக்களை அளிக்கும், உணவுகளாக, திகழ்ந்து, தனியே உடல் நலம் காக்கும் மருந்துகள் தேவையின்றி, இயற்கை வழியே, எல்லோரும் உடல் நலத்துடன் இருந்தார்கள். தற்காலங்களில், கீரைகளை மாதமொருமுறை, சாப்பாட்டில் காண்பதே, அரிதாகி வருகிறது. விளைவு? உடலில் உள்ள வியாதி எதிர்ப்பு ஆற்றல் குறைந்து, சிறு பாதிப்புகள் கூட, உடலை வெகுவாக சிரமப்படுத்திவிடும் காலகட்டத்தில், இன்றைய வாழ்க்கை இருக்கிறது.

தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்

பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த

ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்

நீராரைக் கீரையது நீ

(அகத்தியர் குணவாகடம்)

இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக  விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து  உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.


தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத்  தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.



கீரையை சமைத்துண்னவோ,சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.  ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.  நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத்  தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு  ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது  பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் ஆகிய  பிரச்சினைகள் தீரும்.






குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்,கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால் குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.
ஆரைக்கீரை சூப் 


ஆரைக் கீரை        - 1 கைப்பிடி
கறிவேப்பிலை    - சிறிதளவு
கொத்தமல்லி இலை    - சிறிதளவு
சின்ன வெங்காயம்     - 5
பூண்டுப்பல்        - 3
மிளகு        - 5
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
இஞ்சி        - 1 சிறு துண்டு
உப்பு        - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம்  நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத்  தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

மேலும் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் டிப்ஸுகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து நம்முடைய வலைப்பக்கத்தில் இணைந்து இருங்கள். உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள் 

https://www.podhigaiherbs.com/product/241/immune-care-combo-pack.html 

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup


Read More: 



கருத்துரையிடுக

0 கருத்துகள்