Hot Posts

6/recent/ticker-posts

அதி அற்புதம் வாய்ந்த சுக்குவின் மருத்துவ குணங்கள் - Health Benefits of Dry Ginger

 


சித்த மருத்துவத்தில் சுக்கு ஒரு காயகல்ப மருந்தாக சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம் அன்றாட பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் . சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை என்ற வாக்கியத்தைக்கொண்டே நாம் சுக்கின் மகத்துவம் அறியலாம். இஞ்சியை நன்றாக காயவைத்து அதில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் சுக்கு என்ற பெயரில் நமக்கு கிடைக்கிறது. பொதுவாக குழந்தைகளுக்கு பசி எடுக்க வில்லை என்றாலும் வயிறானது மந்தத் தன்மையை அடைந்தாலும் சிறிதளவு சுக்கு அறைத்து ஊற்று என்று நம் வீட்டில் உள்ள பாட்டி நமக்கு இன்றளவும் கை வைத்தியத்தை சொல்லுவார்கள். சாதாரணமாக எல்லா மளிகை கடைகளிலும் கிடைப்பதால் இந்த சுக்கின் பெருமையானது சிலருக்கு தெரியாமல் போய்விட்டது? நம் அன்றாட உபாதைகளை தீர்க்க இந்த சுக்கு பலவகையில் உபயோகப்படுத்தப்படுகிறது  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 
சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.



வயிறு எரிச்சலை நீக்க கரும்புச் சாறுடன், சுக்கு சிறிதளவு சேர்த்து தினந்தோறும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த சாறினை குடித்து வந்தால் வயிறு எரிச்சலானது குணமாகும்.






இருமலை நீக்க:

சுக்குத் தூளை பயன்படுத்தி தேனீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.









தலைவலியை குணப்படுத்த:
சிலருக்கு வேலை சுமையினாலும், நீண்ட தூர பயணம் மேற்கொண்டாலும், தலைபாரம் வந்துவிடும். தலையில் நீர் கோர்த்து இருந்தால், இரு புருவங்களுக்கு கீழ்ப்பகுதியில் தாங்கமுடியாத வலி வந்துவிடும். இதனை நீக்க சுக்கை சொரசொரப்பாக இருக்கும் கல்லில் உரசி, அதிலிருந்து கிடைக்கும் விழுதுடன், சிறிதளவு பெருங்காயதூளை சேர்த்து தலையில் பற்றுப் போல போட்டு வந்தால் சிறிது நேரத்திலேயே நல்ல பலன் கிடைக்கும். தலையில் இருக்கும் நீரை உறிஞ்சும் சக்தியை சுக்கு பெற்றுள்ளது.

பல் கூச்சம் வாய் துர்நாற்றம் நீங்க:

சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பு சேர்த்து தினமும் காலையில் பல் விளக்க வேண்டும். இது நம் வாய் துர்நாற்றத்தையும்,
பல் கூச்சத்தையும் நீக்கும். வயிற்றுப் பிடிப்பு அதிகமான வேலை சுமை காரணமாக நன்றாக சாப்பிடாமல், நன்றாக தூங்காமல் மன அழுத்தம் ஏற்படும். இதன்மூலம் வயிற்றில் வாய்வு பிடிப்பு உண்டாகிவிடும். அப்போது அரை ஸ்பூன் சுக்குத் தூளுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் உடனடி நிவாரணம் அடையலாம்.

விஷ முறிவுக்கு: 
சுக்கு
, கொத்தமல்லி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும். சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள் பூரான் கடி விஷம் முறியும்.






உடல் எடையை குறைக்க:
ஒரு டம்ளர் தண்ணீருடன், அரை ஸ்பூன் சுக்கு தூளை சேர்த்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி தேன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நம் தொப்பையின் அளவும் குறைந்து நம் உடல் எடை சீராக இருக்கும்.







ஆரோக்கியமான வாழ்க்கைக்கு:
பொதுவாக
அனைவருமே வாரம் ஒருமுறை சுக்கு தூள் சேர்த்த குழம்பினை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு ஏற்படும் வாத நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
சுக்கு, கருப்பட்டி, மிளகு இவைகளை தண்ணீரில் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்துவர உடல் சோர்வானது நீக்கப்பட்டு சுறுசுறுப்பாகும்.

சிறுநீரக நோய்த்தொற்று:


சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியே வராமல் தேங்கிவிட்டால் சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிடும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்றானது நீங்கும்.


அதி அற்புதமான சுக்கு அனைத்து நாட்டு மருந்து  கடைகளிலும் கிடைக்கும். நீங்கள் வீட்டில் இருந்த படியே நமது பொதிகை ஹெர்பல்ஸ் www.podhigaiherbs.com  இணையதளத்தில் எளிதாக ஆர்ட்டர் செய்யலாம் .

முழு சுக்கு மற்றும் சுக்கு பொடியாகவும் கிடைக்கிறது .  









கருத்துரையிடுக

0 கருத்துகள்