Hot Posts

6/recent/ticker-posts

குங்கிலியத்தின் மகிமையை நம்மில் எத்தனை பேர் அறிவோம்

 




குங்கிலியத்தின் தாவரவியல் பெயர் Shorea Robusta என்பது அதன் Latin பெயர்.  வடஇந்தியாவின் இமயமலை அடிவாரத்திலுள்ள காடுகளிலும், தெனிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக்கூடிய கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம், கருமருது மரத்தினைக் கீறி, வடு ஏற்படுத்தப்பட்டு, அதிலிருந்து வடியும் பிசின் சேகரிக்கப்படுகிறது. இது உறைந்து, மருத்துவத்தில் பயன்படும் குங்கிலியமாகிறது. குங்கிலியம் காய்ந்த நிலையில், பொதிகை இனையத்தளத்தில் கிடைக்கும். குங்கிலியத்திற்கு, குக்கில், குக்கிலியம் ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு. இது கற்பூரத் தைலத்தில் கரையும்.

குங்கிலியம் கைப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. வெப்பமுண்டாக்கும்; கோழையகற்றும்; சிறுநீரைப் பெருக்கும். கீல்வாதம், நகச்சுற்று, சீழ்ப்புண், விஷக்கடி, எலும்பு நோய்களைக் குணமாக்கும்.

மேகப்புண், வெட்டை போன்ற நோய்களைக் குணப்படுத்துவதில் இந்த மருந்துகள் முக்கிய இடம் வகிக்கின்றன. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வட இந்தியாவில் இமயமலை அடிவாரத்தில் உள்ள காடுகளிலும் விளையக் கூடிய கருமருது மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படுகின்றது.


அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது? Read More: https://podhigaiherbs.blogspot.com/2021/09/benifits-of-ashwaganda-in-tamil.html

குங்கிலியத்தின்வகைகள்:

வெள்ளைக் குங்கிலியம், சிவப்புக் குங்கிலியம் மற்றும் பூனைக்கண் குங்கிலியம் என்கிற மூன்று வகைகள் உண்டு. மருத்துவப் பயன் அனைத்திற்கும் பொதுவானதே. இருப்பினும் அவற்றிற்கென்று தனித்தனியான, சிறப்பு வாய்ந்த மருத்துவப் பயன்களும் உள்ளன.

குங்கிலியத்தின் மருத்துவ பயன்கள்:



* 50 கிராம் குங்கிலியத்தை தூள் செய்துக் கொண்டு, ½ லிட்டர் நல்லெண்ணெய் உடன் சேர்த்து, நன்றாகக் காய்ச்சி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்திக் கொண்டு, மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி தீரும்.


* வெள்ளைபடுதல் குணமாக குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து, தண்ணீர் விட்டு நன்றாகக் குழைத்து, ½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்.


* 1 கிராம் குங்கிலியத்தைத் தூள் செய்து, 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க இருமல், மார்புச் சளி, இரத்த மூலம் கட்டுப்படும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் சீதக் கழிச்சல் குணமாக 1 கிராம் குங்கிலியப் பொடியுடன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து, உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

* புண்கள் ஆற குங்கிலியக் களிம்பு: குங்கிலியம், மெழுகு, வகைக்கு 100 கிராம், சிறு தீயில் உருக்கி, 350 மி.லி. நல்லெண்ணெய் சேர்த்து, சூடாக இருக்கும்போதே வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனைத் துணியில் தடவி, புண்கள் மீது பற்றாகப் போட வேண்டும்.

குங்குமப்பூவின் ஆரோக்கிய பயன்கள்: https://podhigaiherbs.blogspot.com/2021/08/benefits-of-saffron-in-tamil.html

* குங்கிலியத்தூள், ஜாதிக்காய் தூள், மாம்பருப்பு தூள் ஆகியவை 100கிராம் இலவம் பிசின் 50கிராம் அளவு எடுத்து ஒன்றாக கலந்துகொண்டு காலை மாலை 5கிராம் அளவு பாலில் கலக்கி சாப்பிட கழிச்சல் இரத்தக்கழிச்சல்  நோய் குனமாகும். 

தரமான் குங்கிலியத்தை பொதிகை இனையதளத்தில் எளிதாக ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தலாம். பொதிகை இனையதளத்தின் லின்க்;

https://www.podhigaiherbs.com/product/169/vellai-kungiliyam-white-dammer-raw-100g.html




கருத்துரையிடுக

0 கருத்துகள்