Hot Posts

6/recent/ticker-posts

அம்மான் பச்சை கீரை 2/40

 

எல்லா நோய்களுக்குமே பாரம்பரிய மருத்துத்தில் சிகிச்சை உண்டு. இவை பக்கவிளைவில்லாமல் நோய்களையும் குணப்படுத்தும்.

சித்தமருத்துவம் பெருந்தொற்று நோய்களையும் கட்டுக்குள் வைக்கவும், குணப்படுத்தவும் கூட பயன்படுத்தப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. குறிப்பாக டெங்கு நோய் தாக்கத்துக்கு சித்தமருத்துவ சிகிச்சை தான் சிறப்பாக கைகொடுத்தது.

சித்தமருத்துவம் சொல்லும் மூலிகைகளை எடுத்துவந்தாலே உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் பார்த்துகொள்ள முடியும். சித்தமருத்துவத்தில் மட்டும் அல்லாமல் முன்னோர்கள் காலத்திலும் அதிகமாக பயன்படுத்திவந்த மூலிகைகள் குறித்து அதிகம் பார்த்து வந்திருக்கிறோம். நமது பொதிகை வலைதளத்தில் நாற்பது நாட்களில் நாற்பது வகையான கீரைகளை பற்றியும் அதன் பயன்களை பற்றியும் தொடராக பதிவிட ஆறிவித்திருந்தோம். அதன் வரிசையில் இரண்டாவது கீரையாக அம்மான் பச்சரிசி குறித்து அவசியம் அனைவரும் தெரிந்துகொள்வோம்



Tamil – Amman Pacharisi

English – Snake weed

Sanskrit – Dugdhika

Telugu – Reddine narolu 

Malayalam – Nela paalai 

Botanical name – Euphorbia hirta

பெயரை கண்டதும் இது ஒருவகை அரிசி போலும் என்று நினைக்க வேண்டாம். இது அரிசி அல்ல. மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சிறு மூலிகை. திறந்த வெளிகளில் அதிகமாகவே இந்த செடிகள் காணப்படும். தரையில் படர்ந்து சிறு செடியாக வளரும். இந்த செடியின் விதைகள் பார்க்க அரிசி குருணைகள் போன்று இருப்பதால் இதற்கு பச்சரிசி என்று பெயர். தாய்ப்பால் சுரப்புக்காக பெருமளவு இதை பயன்படுத்திவந்தார்கள்.

அம்மான் பச்சரிசி இலைகள் கூர்மையாக இருக்கும். சிறு செடியாக இருந்தாலும் இதன் தண்டு மெல்லியதாக இருக்கும். இதை உடைத்தால் பால் வடியக்கூடும். அம்மான் பச்சரிசி சிறு சிறு பூக்களின் நிறங்கள் அடிப்படையில் பல பிரிவுகளாக உண்டுஅம்மான் பச்சரிசி பூக்கள் வெண்மையாகவும், காம்புகளுடன் காணப்படும். தாவரத்தில் எப்பகுதியைக் கிள்ளினாலும் பால் வடியும். அது முகப்பருமுகத்தில் எண்ணெய்ப் பசைகால் ஆணிபித்த வெடிப்புஇரைப்பு ஆகியவற்றை குறைக்கவும்தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது. அம்மான் பச்சரிசிக்கு சித்திரப் பாலாடை என்கிற பெயரும் உண்டு. 
 
எங்கு கானலாம்:
அம்மான் பச்சரிசி சிறு செடி வகையைச் சார்ந்ததுதரிசு நிலங்கள்சாலை ஓரங்கள் மற்றும் ஈரப்பாங்கான சமவெளி நிலங்களில் சாதாரணமாகக் காணப்படும்ஆண்டு முழுவதும் பரவலாகக் காணப்படுபவை. 50 செ.மீவரை உயராமாக வளரும்.

அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

அம்மான் பச்சரிசி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவையானது. குளிர்ச்சித் தன்மையானது.

அம்மான் பச்சரிசி குடல் புழுக்களைக் கொல்லும், உள்ளுறுப்புகளிலுள்ள காயங்களை ஆற்றும், மலமிளக்கும், சுவாசத்தைக் சீராக்கும், இருமலைக் தணிக்கும், பெண்களுக்குப் பால் சுரப்பதைத் தூண்டும், பால் மருக்களைக் குணமாக்கும்.



தாய்ப்பால் சுரப்பு அதிகமாக பசுமையான அம்மான் பச்சரிசி செடிகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு கழுவி, அரைத்து, எலுமிச்சம்பழ அளவு 1 டம்ளர் பாலில் கலக்கி, தினமும் காலை, மாலை இருவேளைகள் பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க வேண்டும்.




விந்தணுக்கள் குறைபாடு:

குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் மலட்டுத்தன்மையும் காரணமாகக்கூடும். ஆண் மலட்டுத்தன்மைக்கு இருக்கும் பிரச்சனைகளில் விந்தணுக்கள் குறைபாடும் ஒரு காரணமாக இருக்கும். விந்தணுக்களின் வீரியம் குறைவாக இருப்பது, விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவது, விந்தணுக்களின் ஆயுள் குறைவது போன்ற பிரச்சனைகளால் குறைபாடு கொண்டிருக்கும் ஆண்களுக்கு சித்த மருத்துவம் எளிதாக கைகொடுக்கும்.

இளைப்பு பிரச்சனைக்கு:

சளி, இருமல், இளைப்பு பிரச்சனைக்கு அம்மான் பச்சரிசி நல்ல தீர்வாக இருக்கும். நாள்பட்ட இளைப்பு பிரச்சனை இருந்தால் அது மேலும் தீவிரமாகாமல் தடுக்க இவை உதவும். இளைப்பு பிரச்சனை இருந்தால் அடிக்கடி தும்மல், சைனஸ், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் பெரிதாக வரக்கூடும். இவை நாள்பட இருப்பதோடு அதிக உபாதையும் தரும். 

அம்மான் பச்சரிசி இலையை பறித்து அதனோடு இதர கீரைகளையும் சேர்த்து மசித்து குழம்பாக்கி சாப்பிட்டு வந்தால் இளைப்பு பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கலாம். காய்ச்சல் காலங்களிலும் இவை தீவிரமாகாமல் தடுக்க இவை உதவும்.

 

வெள்ளைப்படுதல்:

பெண்களை வாட்டி வதைக்கும் பிரச்சனையில் வெள்ளைப்படுதலும் ஒன்று. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் இயல்பானது ஆனால் இவை அதிகமாகிவிட்டால் உடலை உருக்கிவிடும். சிலருக்கு வெள்ளைப்படுதல் துர்நாற்றத்துடன் வெளியேறக்கூடும். அடர்த்தி அதிகமாக சளி போன்று வெள்ளைப்படுதல் இருந்தாலே அது கவனிக்கவேண்டியது தான். இதை ஆரம்பத்திலேயே கவனித்து மூலிகை கொண்டே குணப்படுத்திவிட முடியும்.

அம்மான் பச்சரிசி பொடியை பொடித்து வைத்துகொள்ளவும். காலையில் வெதுவெதுப்பான நீர் அரை டம்ளர் எடுத்து அரை டீஸ்பூன் அளவு குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல்

 

மலச்சிக்கல் பிரச்சனை:

அன்றாட வாழ்க்கை முறையிலும் உணவு பழக்கத்திலும் உண்டாகும் மாற்றத்தால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாக கூடும். சிலருக்கு மலம் இறுகலாக இருக்கும். இதை அப்படியே விடும் போது மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். உடலில் மலக்கட்டு நீங்க அம்மான் பச்சரிசி கீரையை பாசிப்பருப்பு, சாம்பார் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து வேகவைத்து மசியலாக்கி கடைந்து சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும். 

மலம் எளிதாக வெளியேறும். ஆசன வாய் அரிப்பு, அவஸ்தை இருக்காது. வளரும் குழந்தைகளுக்கு மாதம் இரு முறை கொடுத்து வந்தாலே மலக்கட்டு இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். வயிற்றுப்புண் பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

 

மருக்கள், கட்டிகள், வீக்கங்கள்:

அம்மான் பச்சரிசியை உடைத்தால் வெளிவரும் பாலை மருக்கள் மீது தடவி வந்தால் மருக்கள் நாளடைவில் உதிரக்கூடும். கால் ஆணி பிரச்சனைக்கு, பாதங்களில் எரிச்சலுக்கும் இவை தடவினால் பலன் கிடைக்கும். வாய்ப்புண் நாக்கில் உண்டாகும் புண்களுக்கும் கூட இதன் பால் தடவினால் பயன் கிடைக்கும்.


கால் முட்டிகளில் வீக்கங்கள், சீழ் வைத்த கட்டிகள் இருந்தால் அம்மான் பச்சரியை மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் கட்டிகள் பழுத்து உடையும். வீக்கங்கள் குறையும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருந்தால் அம்மான் பச்சரிசியை பசும்பால் வெண்ணெயுடன் அரைத்து கலந்து குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

 


பாக்டீரியா கோலி, ஷிகெல்லா டிசெண்ட்ரி பாக்டீரியாக்களை அதிகரிக்காமல் தடுக்க அம்மான் பச்சரிசி உதவுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

விந்து ஒழுகுதல் கட்டுப்பட அம்மான் பச்சரிசி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் இலைகளைச் சம அளவாக எடுத்துக் கொண்டு, நன்றாக அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 1 டம்ளர் எருமைத் தயிரில் கலக்கி காலை வேளையில் மட்டும் 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இரத்தக் கழிச்சல் குணமாக அம்மான் பச்சரிசி இலைகளை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, 200 மி.லி. பசும்பாலுடன் கலந்து, தினமும் காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க வேண்டும்.

ஆஸ்த்துமா, வாய்ப்புண் ஆகியவற்றுக்கான மருத்துவத்திலும் அம்மான் பச்சரிசி துணை மருந்தாகப் பயன்படுகின்றது. அதிக அளவில் உட்கொண்டால் வாந்தியைத் தூண்டும். இதன் நோய் எதிர்ப்புச் சக்தியும், காசநோயைக் கட்டுப்படுத்தும் பண்பும் மருத்துவ ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேலும் இது போன்று பல்வேறு வகையான கீரைகள, மூலிகைகள் மற்றும் டிப்ஸுகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து நம்முடைய வலைப்பக்கத்தில் இணைந்து இருங்கள். உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள். அம்மான் பச்சரிசியை நம் பொதிகை இனையதளத்தில் வாங்கலாம் 

https://www.podhigaiherbs.com/product/37/amman-pacharisi-snake-weed-raw-.html

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup



 

கருத்துரையிடுக

0 கருத்துகள்