Masikkai Uses in Tamil:
Botanical Name : Quercus Incana Roxb, Quercus infectoria
Tamil Name
: மாசிக்காய் /
Masikai Powder
English Name
: Bluejack, Oak Gall Powder, Oak Apple Powder
Malayalam Name : മാജക്കാണീ / മഷിക്കായ് / Majakaanee, Mashikkay
Hindi Name
: माजूफल / माजूफल / माजू / Maajoophal/ Majuphal/ Mazu
Telugu Name
: మంచికాయ /
Machikaaya
Sanskrit Name
: Ambastha
Kannada Name
: Machi Kaayi
மாசிக்காய். மகத்துவமான மருத்துவ குணங்களை கொண்டிருக்க கூடியது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும்.. மருத்துவ குணமிக்க மாசிக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட சிறந்த மூலிகை இது. மாசிக்காய் என்பது மரங்களிலிருந்து காய்க்கப்படும் காய் அல்ல. இது பூவிலிருந்தும் பெறுவதல்ல. இந்த மரத்தின் கிளைகளை பூச்சிகள் துளையிடும். அப்போது மரத்திலிருந்து வடியும் பால் உறைந்து கெட்டிப்படும். இப்படி கெட்டிபட்டு எடுக்கப்படுவதே மாசிக்காய் ஆகும். மிகவும் கடினமான மாசிக்காய் துவர்ப்புச்சுவை கொண்டிருக்க கூடியது. இதை கொண்டு முன்னோர்கள் எதற்கெல்லாம் வைத்தியம் செய்தார்கள் என்பதை அறிந்தால் நீங்களும் பயன்படுத்த தொடங்கிவிடுவீர்கள். கைக்குழந்தை முதல் வயதானவர்கள் அனைவருக்குமான மாசிக்காய் நீரிழிவு புண்களையும் ஆற்றும் வல்லமை கொண்டது.
பல் ஈறுகளில் ரத்தம்:
பற்கள்மற்றும் பல் இடைவெளியில் மென்மையான உணவு படிந்து நாளடைவில் படிமானமாகி ஈறுகளில் காயம் உண்டாகி பற்களில் ரத்தகசிவு உண்டாகும். பல் கூச்சம்,ஈறுகளில் வலி போன்றவை இருக்கும் போது மாசிக்காயை அப்படியே வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து சாறை மட்டும் விழுங்கலாம். துவர்ப்பு சுவையோடு இருக்கும்.
அல்லது மாசிக்காயை நீரில் கொதிக்க வைத்து சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அவை வெதுவெதுப்பானதும் வாய்கொப்புளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மாசிக்காய் நீர் பல்லின் இடையிலும், ஈறுகளிலும் படும்படி நன்றாக சுழட்டி கொப்புளிக்க வேண்டும். தினமும் இரு வேளை இதை செய்து வந்தால் ஈறுகளில் ரத்தக்கசிவு நின்றுவிடும். வாய்ப்புண் பிரச்சனையும் குணமாகும்.
பிறந்த குழந்தைக்கு:
குழந்தை பிறக்கும் போது
அதன்
நாக்கில்
மாவு
போன்று
வெள்ளை
நிறத்தில்
படிந்திருக்கும். அந்த மாவை வெள்ளை
துணி
கொண்டு
நீக்குவதுண்டு என்றாலும் அவை முழுமையாக
நீங்க,
மாசிக்காயையும், ஜாதிக்காயையும் சந்தனக்கல்லில் உரசி
இலேசாக
குழந்தையின்
நாக்கில்
தடவுவதுண்டு.
குழந்தைக்கு
வயிற்றுப்போக்கு உண்டாகும் போது மாசிக்காயை
உரைத்து
தேனில்
குழைத்து
சிட்டிகை
அளவு
குழந்தையின்
நாக்கில்
தடவினால்
வயிர்றுப்போக்கு கட்டுப்படும். மாசிக்காய் பொடி
நாட்டு
மருந்து
கடையில்
கிடைக்கும்
என்றாலும்
கூட
மாசிக்காயை
உரைத்து
பயன்படுத்துவது குழந்தைக்கு நல்லது.
ஆசனவாய் கடுப்பு:
ஆசனவாய் பகுதியில் பின்புறத்தில் வெட்டு நெட்டு குத்தல்
போன்று
சருமத்தில்
கீறிகொண்டிருக்கிறது போன்று வெடிப்புகள்
கொண்டிருக்கும். அந்த இடம் அதிகப்படியான
சுருக்கத்தை
கொண்டிருக்கும். இதனால் மலம் கழித்த
பிறகு
கொடுமையான
வலியை
உணர்வார்கள்.
இந்த
ஆசனவாய்
வெடிப்புடன்
மலம்
கழித்தாலும்
சில
சொட்டு
ரத்தமும்
சேர்ந்து
வெளியேறும்.
இதை
தவிர்க்க
மாசிக்காயை
நீர்விட்டு
குழைத்து
ஆசனவாய்
பகுதியில்
வெடிப்பு
இருக்கும்
பகுதியில்
தடவி
வந்தால்
வெடிப்பு
புண்
ஆறும்.
கட்டுப்படாத
மூலநோயை
கூட
பக்குவமான
மாசிக்காய்
தயாரிப்பில்
கட்டுப்படுத்தினார்கள் வீட்டு பெரியவர்கள்.
மாதவிடாய் இடுப்புவலி:
மாசிக்காயை இலேசாக வறுத்து
பொடித்து
வைத்துகொள்ளவும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில்
அதிக
ரத்தப்போக்கு
உண்டானால்
காலையில்
வெறும்
வயிற்றில்
3 சிட்டிகை
மாசிக்காய்
தூளை
பசும்பாலில்
கலந்து
குடித்தால்
ரத்தபோக்கு
குறையும்.
மாதவிடாய்
நேரத்தில்
உண்டாகும்
இடுப்பு
வலி,
வயிறு
வலி
உபாதை
குறையக்கூடும். வெள்ளைப்போக்கு அதிகமாக இருப்பவர்களும் இதே போன்று மாசிக்காய்
பொடியை
பாலில்
அல்லது
மோரில்
கலந்து
குடித்துவரலாம். பெண் உறுப்பில் வெள்ளை
கசிவு
நீங்கும்.
பெண்
உறுப்பில்
வலி
இருந்தால்
மாசிக்காய்
கொதிக்க
வைத்த
நீரை
வெதுவெதுப்பாக்கி கழுவி வர இரண்டு
மூன்று
நாட்களில்
பெண்
உறுப்பு
வலி
குறையும்.
Read More : மாதவிடாய் சீராக்கும் ”குமரி பக்குவம்”
படபடப்பு நீங்க:
மாசிக்காய் பயன்கள்: ஒரு சிலருக்கு மனதில் கவலை மற்றும் பயம் இருந்தால் அதிக படபடப்பு ஏற்படும். படபடப்பு நீங்குவதற்கு மாசிக்காய் பொடியை பாலில் கலந்து நாக்கில் தடவி வரலாம்.
பருக்கள் நீங்க:
கோடை காலத்தில் அதிக உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்து விடும். ஒரு சிலருக்கு எண்ணெய் சருமம் அல்லது ஜீன் காரணமாக சருமத்தில் பருக்கள் இருக்கும். முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்க இரவு நேரத்தில் முகத்தில் அரை டேபிள் ஸ்பூன் ஜாதிக்காய் பொடி, அரை டேபிள் ஸ்பூன் மாசிக்காய் பொடியை நீரில் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். பின் அதை காலையில் கழுவி விடலாம். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
Read More: காலை நேரக் கரிசாலை பானம்!
சேற்றுபுண்:
கால் இடுக்கில் வரக்கூடிய
நாள்பட்ட
சேற்றுபுண்ணை
கிருமிகளோடு
அழிக்கவும்
, விரல்
இடுக்குகள்
மீண்டும்
பழைய
நிலைமைக்கு
வரவும்
மாசிக்காய்
பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்பு
மாசிக்காயை
நீரில்
குழைத்து
விரல்
இடுக்கில்
புண்
இருக்கும்
இடத்தில்
தடவி
வந்தால்
சேற்றுப்புண்
வந்த
சுவடு
தெரியாமல்
நீங்கிவிடும்.
ஐந்து
ரூபாய்
மாசிக்காயில்
சேற்றுபுண்ணை
முழுமையாக
குணப்படுத்தலாம்.
Read More: பச்சை கற்பூரம் பயன்கள் Benefits of green camphor
கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள் :
More Herbal products click here:
0 கருத்துகள்