Hot Posts

6/recent/ticker-posts

ஆவாரம் பூவின் பயன்கள்:

 

ஆவாரம் பூ 



பெரும்பாலான தாவர வகைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய்கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூஅப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோஎனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது. இந்த ஆவாரம் பூ பற்றிய சில பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Click here to buy Aavaram Poo Podwer

ஆவாரம் பூ பயன்கள்:

 முக அழகு எல்லோருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்றை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும். 

உடல் துர்நாற்றம்:



கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.

ஆவாரம் பூ பவுடர் எங்கு கிடைக்கும் Link Link: 


காய்ச்சல்:

பெரும்பாலான காய்ச்சல் வகைகள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது. எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.

சிறுநீரக தொற்று:


பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.


நீரிழிவு:

ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.

நீர் வறட்சி:

வெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.







கல்லீரல்

வயிறு ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.


கிருமி நாசினி:


ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.



மாதவிடாய்:

சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும்.


கண்கள்:

மழைக்காலங்களில் சிலருக்கு கஞ்சைக்டிவிட்டீஸ் சுருக்கமாக கூறினால் மெட்ராஸ் எனப்படும் கண் சம்பந்தமான வியாதி ஏற்படுகிறது. இப்பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்