நம் முன்னோர்கள் இந்த கீரைகளின் மருத்துவ பண்புகளை தெரிந்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர், ஆனால் நாம் கீரை என்றால் ஏதோ முளைக்கீரை மட்டும் என்று நினைக்கிறோம், அப்படி பட்ட நம் சந்ததிக்கு ஏதோ நம்மால் முடிந்தவரை பயன் தரும் கீரை மற்றும் இலைகளை பற்றி ஆவனப்படுத்தி உலாவர செய்து கீரை மற்றும் அதன் பயன்கள் பற்றிய தகவல்களை நம் பொதிகை வலைதளத்தில் பதிந்துவருகிறோம். இத்தொடர் பதிவுக்கு வாசகர்கள் அளித்துவரும் ஆதரவு மேலும் உற்சகத்துடன் தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கிறது. பேராதரவு தந்து எம்மை உற்சாகப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
இந்த தொடர்
பதிவின் நோக்கம் கீரைகளை அழியாமல் இயற்கை பாதுகாக்கும்,
ஆனால் கீரை பற்றிய நமது புரிதலை,அந்த மரபு அறிவை நாம் தான் அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க
வேண்டும்.. அது நமது கடமையாகும்.
காட்டு கடுகின் மற்றொரு பெயர் நாய்
கடுகு! பலர் இந்த பெயரை
கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான
மூலிகை. இந்த செடியை நீங்கள்
தெருவோரங்களில், காட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம் காணலாம், மழை காலங்களில் இது
அதிகமாக காணப்படும். ஆனால் அதுதான் நாய் கடுகு என்று
பலருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு களைச்செடி
என்று கடந்து சென்று விடுவார்கள். இந்த நாய் கடுகு
(mustard seeds) செடியின், பூக்கள்,
விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர்,
கிளிமே விச்கோச (Cleome viscosa). இந்த நாய் கடுகை,
நாய்வேளை, மற்றும் காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள்.
இந்த
செடி ஒரு மீட்டர் உயரம்
வரை வளரும்.இதன் பூக்கள் மஞ்சள்
நிறத்தில் சிறிதாக இருக்கும். இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தான், சைனா, அமெரிக்க போன்ற நாடுகளிலும் இந்த நாய் கடுகு
செடி அதிகம் காணப்படுகின்றது.இதன் இலைகள் சிறிதாகவும்,
மூன்று பிரிவுகளோடும் இருக்கும்.இதன் காய்கள் குச்சி
போன்று நீளமாக இருக்கும். இதனுள் இருக்கும் விதைகள் கடுகு போன்று சிறிதாக இருக்கும், அது நாய் கடுகு
என்று அழைக்கபடுகின்றது.
இந்த
நாய் கடுகு செடியின் விதை, காய், பூக்கள், இலைகள், தண்டு, வேர் என்று அனைத்துமே
மருத்துவ குணங்கள் கொண்டது.இந்த நாய் கடுகு
சித்த வைத்தியம், யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது.இது பல நோய்களை
குணப்படுத்த பயன்படுகின்றது.இந்த செடியில் ப்லேவனைடு
(flavonoids), ப்லேனைடுஸ்,
டேர்பின்(Dorphin), ஹைட்ரோகார்பன், பளிப்ளினைடுஸ் போன்ற பல நன்மை தரும்
வேதி பொருட்கள் உள்ளன.நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு, ஹெல்மாடிக் எதிர்ப்பு செயல்பாடு டயரியல் எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, எமெடிக் எதிர்ப்பு, ஹெபடோ பாதுகாப்பு போன்ற பண்புகளும் இதற்கு உள்ளது.
மருத்துவப் பயன்கள்:
வாதம், உடல் கடுப்பு, வன்சூலை, பீநிசம் ஆகிய நோயெல்லாம் இம்மூலிகையால்குணமாகும்.
"வாதம் உடற்கடுப்பு வன்சூலை காதிரைச்சல்
ஓதமிகு பிநிசம் ஓடுங்காண் - போதெறிந்து
காய் வேளைக் காயும் விழிக் காரிகையே!
நாய் வேளையுண்ண நவில் வையமிதில்"
நாய்கடுகின் பயன்கள் குறித்த சித்தர் பாடல்
கல்லீரல் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது ஏற்ற மருந்தாக (பலன்) உள்ளது, குறிப்பாக் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு குறைகள் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
வயிற்றில் இருக்கும் கொக்கி புழு, மற்றும் நாடா புழுக்களை வெளியேற்ற இது உதவும்.
வாந்தி
மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்
காட்டுக்
கடுகின் இலையை வெந்நீர் விட்டுக் கசக்கிப் பிழிந்த சாற்றில்
இரண்டொரு துளி காதில்விட காது நோய் குணமாகும்.
- உடலில் உருவாகும் தேவையற்ற அணுக்களை வளர விடாமல் தடுக்கும்
- தூக்கமின்மை பிரச்சனையை போக்கி, நல்ல தூக்கத்தை பெற உதவும்
- காது வலி, மற்றும் காதில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவும்
- அனைத்து சரும பிரச்சனைகளை போக்க இது உதவும்
- நரம்பு தளர்ச்சியை இது போக்க உதவும்
- வயிற்று புண், மஞ்சக்காமாலை, சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்
- இதன் வேர்கள் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்
- ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்
- வாயு பிரச்சனையை போக்க உதவும்
இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள்.
உங்களுக்கு
தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற
ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில்
மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.
இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள்.
உங்களுக்கு
தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற
ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில்
மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.
https://www.podhigaiherbs.com/product/119/naai-kadugu-dog-mustard-raw-100g.html
To order log in to www.podhigaiherbs.com
அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க
#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious
#ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள்
#மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை
#Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup
0 கருத்துகள்