நல்ல
பிளாஸ்டிக்?
‘நல்ல
பிளாஸ்டிக்’ என்கிற ஒன்று இல்லவே இல்லை. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே
வகைப்படுத்த முடியும். ஒரு லட்சம் சிந்தடிக்
கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே இதுவரை ஆய்வு செய்துள்ளனர். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும்
என யாருக்குமே தெரியாது.
பொருளாதாரத்தில்
வளமாக உள்ள, சத்தான உணவு உண்பவர்களின் ரத்தத்தை
ஆய்வு செய்து பார்த்தபோது, அதில் 275 ரசாயனங்கள் இருந்திருக்கின்றன. அவர்களுக்கே இந்த நிலை என்றால்
பிற மக்களின் நிலை இன்னும் மோசம்.
பிரஷ்
முதல் பால் வரை!
நம்
அன்றாட வாழ்வில் காலையில் பல் துலக்குவதில் தொடங்கி
இரவில் பால் குடிப்பது வரை
எங்கும் எதிலும் பிளாஸ்டிக்தான். பிளாஸ்டிக் பிரஷ், பிளாஸ்டிக் ப்ளேட், பாக்கெட் பால், லன்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் என எங்கும் பிளாஸ்டிக்
மயம். பிளாஸ்டிக் பொருட்களில் சூடான உணவை வைக்கும் போது
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் உணவோடு
கலந்து விடும். இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் ரசாயனங்கள் உணவு மூலமாக தினமும்
நம் உடலில் சேர்கின்றன. இதனால் பலவிதமான நோய்களும், குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
“பிளாஸ்டிக்
பொருட்கள் தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது. இதில் ஏழு வகையான தாலேட்ஸ்கள்
மிக ஆபத்தானவை. நாம் வாங்கும் வாட்டர்
பாட்டிலின் அடிப்பகுதியைப் பார்த்தால், முக்கோண வடிவில் எண் 1 என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதே போல பாட்டிலின் லேபிளிலும்
‘ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியுங்கள்’
என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நாம் கவனிக்காமல்
பல நாட்களுக்கு அதே பாட்டிலைப் பயன்படுத்தி
வருகிறோம். மலிவான விலையில் உற்பத்தியாகும் பாட்டிலில் இருந்து டி.இ.எச்.பி (Di(2-Ethylhexyl)
Phthalate (DEHP)) என்ற
ரசாயனம் வெளியாகி நீருடன் கலக்கும். இது புற்றுநோய் உண்டாக்கும்
காரணியாக மாறுகிறது.
தாலேட்ஸ்
உள்ள பி்ளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு இயல்புக்கு மீறிய பாலின உறுப்புகள் வளர்ச்சி, ஆண்மைக்்குறைவு, குழந்தை களுக்கு மார்பக வளர்ச்சி, பெண்களுக்கு அதிக மார்பக வளர்ச்சி,
கருச்சிதைவு, குறைப்பிரசவம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது.
ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன.
நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது.
நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாகும். நெகிழிகளை தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை களின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் செய்ய வேண்டியவைகள்.. தரமான துணிப்பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் அடைத்த குடிநீர், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
நெகிழி மண்ணில் மக்குவதற்க்கு ஆகும் காலம்:
பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. நெகிழிப்பை களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
0 கருத்துகள்