Hot Posts

6/recent/ticker-posts

உடல் சூடு குறைய பலன் தரும் காசினி கீரை 7/40

 


காணாம்கோழிக் கீரை என்ற பெயர்தான் மருவி காசினி கீரை ஆனது. இது புளிச்ச கீரை வகையை சேர்ந்த கீரையாகும். காசினிக்கீரையின் தாவரவியல் பெயர் 'சிக்கோரியம் இன்டிபஸ்' [Chicorium intybus] என்பதாகும். காபி பொடியில் கலப்பார்களே ‘சிக்கரி’, அது இந்த செடியில் இருந்து தான் எடுக்கப்படுகிறது.

காசினி கீரையில் இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சத்துகளான , பி, சி, போன்றவை நிறைந்து உள்ளது. காசினி கீரை அதிக உயிர்ச்சத்து கொண்டதாகும். காசினி கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது. காசினி கீரையானது கொம்புக் காசினி, சீமைக் காசினி, வேர்காசினி, சாலடு காசினி என பல வகைப்படும்.

காசினி கீரையின் மருத்துவ பயன்கள்:

காசினி கீரையில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் நலம் மேலோங்கும். காசினிக்கீரை இலை, வேரை பொடி பாணமாக்கிதேனீருக்கு பதிலாக பருகலாம்

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் , பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை  உடையது 

உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை. 

உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலை குண்டாவதில் இருந்து பாதுகாக்கிறதுசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அவ்வளவு எளிதில் ஆறாது. இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் பற்று போல போட்டு கட்டினால் விரைவில் புண்கள் ஆறிவிடும். இந்த கீரையின் வேர் காய்ச்சலைப் குணமாக்கி உடலுக்கு அதிக வலுவை கொடுக்கும்.

காசினி கீரையை உண்டு வந்தால் பற்கள் சம்பந்தமான எந்த பிரச்சனையும் உங்களை அண்டாது. பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும். 

காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி  வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும். காசினி கீரையானது ஜீரண கோளாறு, பித்தப்பை, ரத்த சோகை, கல்லீரல் நோய்கள், சிறுநீரக நோய்கள், இருதய நோய்களை குணபடுத்தும் தன்மை கொண்டது.

 காசினி; கீரை சிறுநீரகத்தை சுத்திகரித்து நன்கு செயல்பட வைக்கும். 

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து  தினமும் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால்  அதிக உதிரப்போக்கு குறையும். 

அதிக உயிர்ச்சத்து கொண்ட காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள்  ஆறிவிடும். இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். 

காசினி கீரை விந்தணு உற்பத்தியை ஊக்குவிக்கும். காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள். 

உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள். 

https://www.podhigaiherbs.com/product/241/immune-care-combo-pack.html

 To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க 

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup

கருத்துரையிடுக

0 கருத்துகள்