Hot Posts

6/recent/ticker-posts

பச்சை கற்பூரம் பயன்கள்


மிகசிறப்பான கிருமி நாசினியான பச்சை கற்பூரத்தை தீபாராதனைக்கும் , மத சடங்குகளுக்கு மட்டுமே உகந்தது என்ற சிந்தனைய மக்கள் மனதில் புகுத்திவிட்டோம். ஒவ்வொரு வீட்டிலும் பயன்பாட்டு அவசியமாக இருக்கவேண்டிய மிக முக்கியமான பொருளை பூஜை அறையில் வைத்து பூட்டிவிட்டோம். ஆயுர்வேத முறைப்படி கற்பூரத்தில் இருக்கக்கூடிய கலவைகள் , கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பயன்படும் என்றும் இதற்கு முன்னதாக இன்புளுவென்சா, பிளேக் போன்ற நோய்களுக்கு எதிராக பச்சை கற்பூரம் மிகவும் பயன்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். இறை நம்பிக்கை கொண்டவர்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்வது வழக்கம்


இது உணவு, ஆன்மிகம், மருத்துவம், அழகு மற்றும் ஆரோக்கியம் என பல பயன்பாடுகளை கொண்டது.
அன்றைய கால கட்டத்தில் நமது முன்னோர்கள் பச்சை கற்பூரத்தை மிக பிரதானமான ஒரு பொருளாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
இலவங்கப்பட்டை மற்றும் பச்சை கற்பூரம் என்பன ஒரே தாவர குடும்பத்தை சார்ந்தவை.
பச்சை கற்பூரம் மற்றும் தீப ஆராதனைகளுக்கு பயன்படுத்தப்படும் கற்பூரம் இரண்டும் வெவ்வேறானது.

பச்சை கற்பூரம் பயன்கள்:


  • சிறந்த கிருமி நீக்கி
  • சளி தொல்லை குணமாக்கும்
  • சுவாச கோளாறுகளை குணமாக்கும்
  • புத்துணர்ச்சி கொடுக்கும்
  • பாத வெடிப்பு நீக்கும்
  • நேர்மறை எண்ணங்களை வளர்க்கும்
  • சிறந்த நறுமணம் கொடுக்கும்







உணவில் பச்சை கற்பூரம்:

முன்னைய காலங்களில் இனிப்பு போன்ற விரைவில் பழுதடையும் உணவுகள் செய்யும் போது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வந்தார்கள்.
காரணம் பச்சை கற்பூரம் பங்கஸ் போன்ற கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டதால் உணவுகள் விரைவில் பழுதடையாமல் இருக்கும்.
 
உதாரணமாக பூந்தி தயாரிக்கும் போது பச்சை கற்பூரமும் சேர்த்தே செய்கிறார்கள்.

கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தங்களில் பச்சை கற்பூரம் சேர்த்தே தீர்த்தம் செய்கிறார்கள்.
இந்த பச்சை கற்பூரத்தை உணவில் சேர்க்கும் போது உணவில் கிருமி தொற்று ஏற்படாது. அதே போல உணவின் சுவையும் அதிகரிக்கும்

மருத்துவ பயன்கள்:

இந்த பச்சை கற்பூரம் சளி தொல்லை மற்றும் சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.
பச்சை கற்பூரம் சிறந்த நறுமணம் கொண்டது. இதை வீட்டில் வைத்திருந்தால் காற்றில் பரவி நல்ல நறுமணத்தை தருவதோடு சுவாசத்திற்கும் ஆரோக்கியமானது.

கால் பாத வெடிப்பு உள்ளவர்கள் பச்சை கற்பூரத்தை தடவி வந்தால் பாத வெடிப்பு குணமாகும்.

இந்த பச்சை கற்பூரம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது.

ஆன்மீகத்தில் பச்சை கற்பூரம் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகிறது. பச்சை கற்பூரத்தை பர்ஸில் வைத்திருந்தால் பணம் கூடும், பச்சை கற்பூரத்தை நெற்றியில் திலகமாக வைத்துக்கொண்டால் பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும் போன்ற நம்பிக்கைகள் மக்களிடையே இருக்கின்றது. அது எந்த அளவிற்க்கு உண்மை என்பது தெரியாது. அது ஒரு நம்பிக்கை. அறிவியலற்ற எந்த பயன்பாடுகளையும் நாம் இங்கு பதிவதில்லை.

மேலும் பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் டிப்ஸுகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து நம்முடைய வலைப்பக்கத்தில் இணைந்து இருங்கள். உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள் 

https://www.podhigaiherbs.com/product/216/pacha-karpooram-bhimseni-kapooredible-camphor-50-gram.html 

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க



#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup # Pachai Karpooram Uses In Tamil

# பச்சை கற்பூரம் பயன்கள்
#Medicinal benefits of pachai karpooram
#Edible_karpooram
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்