பொங்கல் பண்டிகையின்
போது வீடுகளுக்கு வெள்ளையடித்து காப்புக் கட்டுதல் என்ற சடங்கை நடத்துவது வழக்கம். ஆவாரை,
கார்த்திகைப்பூ என்ற சிறுபீளை, வேப்பிலை இந்த மூன்று மூலிகைகளையும் ஒரு கொத்தாகக் கட்டி
வீட்டு முற்றத்தில் செருகி வைப்பார்கள் ஏன் தெரியுமா? அதுதான் அந்த காலத்தில் முதலுதவிப்
பெட்டி, ஒவ்வொரு மூலிகையும் ஒவ்வொரு குணமுடையது. ஆபத்து நேரங்களில் அங்கிங்கு அலையாமல்
சட்டென் எடுத்துப்பயன்படுத்தவே “ காப்புக் கட்டு” என்ற பெயரில் பழக்கப்படுத்தினார்கள்.
காலப்போக்கில் அது வெறும் சடன்காகிப் போனது. ”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ"
என்ற மூத்தோர் சொல் எவ்வளவு சிறப்பான என்பதை ஆவாரையின் பலனை அனுபவித்தவர்களால் தான்
உணர முடியும். சாதாரனமாக நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதையில், கைக்கெட்டும் தூரத்திலேயே
ஆயிரக்கனக்கான் மூலிகைகள் இருக்கின்றன அந்த வகையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்
மஞ்சள் நிறப் பூக்களுடன் பூத்து குலுங்குபவை தான் இந்த ஆவாரை. வறண்ட நிலத்தில் தான்
வளர்ந்தாலும், மனிதர்களின் நோய்களைத் நீக்கி நோண்ட ஆயுளைக் கொடுக்கும் அற்புத மூலிகை
ஆவாரை.
ஆவாரையின்
மருத்துவப் பயன்கள் :
** ஆவாரைப்
பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை
நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின்
வாய்க் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகும்;
பற்கள் பலம் பெறும்.
** இதையே
உள்ளுக்குக் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல்
தடுக்கப்படும்.
** ஆவாரை
விதையைக் காய வைத்து பொடித்து
வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப்
பற்றாகப் போட்டு வைக்க கண்களின் சிவந்த நிறம் நீங்கும். அத்துடன் கண் எரிச்சல், நீர்
வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.
** ஆவாரை
இலை குளிர்ந்த தன்மையுடையது என்பதால் கோடை வெயிலில் பயணம்
செய்பவர்கள் ஆவாரம் இலைக் கொத்துக்களை தலை மீது பரப்பி
நிழல் தரும்படி வைத்துச் செல்வர். இதனால் வெப்ப சலனத்தால் வரும் மயக்கம், வலிப்பு போன்றவை தவிர்க்கப்பெறும்.
** ஆவாரம்பூவைக்
கூட்டாகவோ, கறியாகவோ சமைத்து சாப்பிட உடலின் கற்றாழை வாடை விலகிப் போகும்.
** ஆவாரைப்
பஞ்சாங்கம் எனப்படும் வேர், இலை, பட்டை, பூ,
காய் ஆகியன சேர்ந்த கலவையை சம அளவு எடுத்து,
அதன் கலவையை 10 கிராம் அளவு காலையும் மாலையும்
இருவேளை வெந்நீர் சேர்த்து உண்டு வந்தால் சரும நோய்கள், நாவறட்சி,
அடங்காப்பசி, உடல் மெலிவு, உடல்
எரிச்சல், உடல் சோர்வு, மயக்கம்,
மூச்சு முட்டுதல் ஆகியன விரைந்து குணமாகும்.
** ஆவாரைச்
செடியின் பிசின் சேகரித்து தினமும் இருவேளை குளிர் நீேராேடா அல்லது மோரோடோ பத்து கிராம் வரை குடித்து வர
இருபாலருக்கும் ஏற்படும் வெள்ளைப்போக்கு குணமாகும். சிறுநீர்த் தாரையில் ஏற்படும் எரிச்சலும் விலகிப் போகும்.
** ஆவாரை
பஞ்சாங்கம் வாங்கி குடிநீர் ஆகக் காய்ச்சி குடிநீரின்
அளவுக்கு சரியளவு பனங்கற்கண்டு சேர்த்து வால்மிளகு, ஏலக்காய் இவற்றை போதிய அளவு உடன் சேர்த்து
மணப்பாகாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு தினம் இருவேளை பால் அல்லது நீர்
சேர்த்து பத்து மில்லி வரை சாப்பிட்டுவர இளைத்த
உடல் பலம் பெறும். அதிக
சிறுநீர் போவது மட்டுப்படும்.
** ஆவாரம்
இலையை இடித்து தலை முதல் கால்
வரையில் உடம்பில் ஊறும்படி ஓரிரு மணி நேரம் பூசி
வைக்க வாதம் என்னும் வாயுத் துன்பம், உடலில் ஏற்பட்ட ரணம் ஆகிய அனைத்தும்
போகும்.
** ஆவாரம்
பூ, உலர்ந்த எலுமிச்சைத் தோல், பச்சைப்பயறு, ரோஜா இதழ்கள், கஸ்தூரி
மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து
மெல்லிய பொடியாகத் தயாரித்து வைத்துக்கொண்டு, பன்னீர் சேர்த்து குழைத்து முகப்பூச்சாக பூசி வைத்திருந்து அரை
மணி நேரம் கழித்துக் கழுவினால் முகத்தின் கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தின் சரும சுருக்கம் ஆகியன
விலகும். இதை உடலுக்குப் பூசிக்
குளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
** ஆவாரம்
பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்
கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில்
10 கிராம் அளவு சாப்பிட்டு வர
ரத்தசோகை குணமாகும். புதிய ரத்தம் உற்பத்தி ஆகும்.
** ஆவாரம்
இலையைக் காய வைத்து அன்றாடம்
மாலை வேளையில் வீட்டில் புகை மூட்ட இரவுக்
கால பூச்சிகள், கொசுக்கள் வீட்டை விட்டு விலகிப் போகும்.
** ஆவாரம்
பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக்
கொண்டு சம அளவு பாசிப்பயறு
மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன
குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும்.
** ஆவாரையின்
வேரைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் 10 கிராம் அளவுக்கு தீநீர் இட்டுக் குடிக்க காய்ச்சல் எவ்வகையாக இருந்தாலும் அடங்கிப் போகும். அது மட்டுமின்றி சர்க்கரை
நோயும் கட்டுக்கடங்கும்.
** ஆவாரம் பூவின் சூரணத்தை அந்தி சந்தி என இரண்டு வேளை
பெண்கள் வேளைக்குப் 10 கிராம் வீதம் சாப்பிட்டு வர PCOD எனும் கர்ப்பப்பைக் கட்டிகள் கரையும்.
** ஆவாரையைத்
தேநீராக்கிக் குடித்து வருவதால் இரண்டாம் நிலைச் சர்க்கரை(Type 2) தவிர்க்கப்படும். ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கையும், அதன் பயணத்தன்மையும்(Motility) அதிகரிக்கும். மது குடித்ததால் ஏற்பட்ட
ஈரல் நோய்கள் குணமாகும். மலச்சிக்கல் மட்டுப்படும். சிறுநீர்த்தாரைத் தொற்றுகள் சீராகும்.
AD: *ஆவாரம் பூவில் செய்யப்பட்ட குளியள் சோப்: தரமான முறையில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவது விற்பனையாகிவரும் பொதிகை ஹெர்பல்ஸின் ஆவாரம் பூ குளியல் சோப்பை பயன்படுத்திப்பாருங்கள் மாற்றத்தை உண்ர்வீர்கள்.
ஆவாரை நீர்:
இன்றைக்கு தேநீர்
அருந்தாமல் நம்மால் இருக்க முடியவில்லை, அதனால் உடல் அரோக்கியத்துக்கு எந்த பலனும்
இல்லை. பணம் செலவாவதுதான் மிச்சம். அதைவிட ருசியான, மிக மிக செலவு குறைந்த, அரோக்கியத்தை
அள்ளித்தரும் ஆவாரை நீரைப் பருகிப்பாருங்கள பிறகு அதை மட்டும் தான் பருகுவீர்கள். கையளவு
ஆவாரம் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் தேன் அல்லது பனங்கருப்பட்டி
கலந்து அருந்தினால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், சரும நோய்களும் குணமாகும்.
கிரீன் டி என்ற
பெயரி இன்றைக்கு அதிகமாக விற்பனையாகும் தேநீரை விட ஆயிரம் மடஙு அற்புதமானது, ஆவாரை
நீர் இது மட்டுமல்ல ஆவாரை இலையைப் பறித்து, கல்லில் வைத்து அரை குறையாகத் தட்டி தலையில்
தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, கண்களின் வழியே வெளியேருவதை உணர முடியும். தலை முடி வலர, உடலனி மினுமினுப்பாக்க,
உடல்துர்நாற்றத்தைத் துரத்த என் அனைத்துக்கும் ஆவாரை பயன்படுவதால் இதனை, சகல நோய் தீர்க்கும்
சர்வரோக நிவாரணி என்கிறார்கள். இவ்வளவு அற்புதங்களைச் செய்வதனால் தான் ”ஆவாரை பூத்திருக்க
சாவாரைக் கண்டதுண்டோ” எனச் சொல்லி வைத்தார்களோ நம் முன்னோர்கள்.
இனியாவது ஆவாரையைஆதரிப்போம்.