மாறிவரும் உணவுப்பழக்கங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், எதை சாப்பிடுகிறோம் என்ற உணர்வு இல்லாமலேயே, மசாலா மணம் சுண்டி இழுக்கும், செரிமானத்துக்கு பாதிப்புகள் தரும் உணவுவகைகளை எல்லாம், நேரம்காலம் பாராமல், அதிக அளவில் உட்கொள்வது, அளவற்ற உற்சாகபான உபயோகம், புகை மற்றும் கூடுதல் அளவிலான காபி, டீ பருகுதல் போன்றவற்றால், உடலில் உள்ள வியாதி எதிர்ப்பை உண்டாக்கும் உறுப்புகளின் இயக்கங்கள் பாதிப்படைகின்றன, விளைவு, இரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் கலந்து, உடலின் முக்கிய உறுப்புகளை செயலிழக்க வைக்கின்றன.
இதன்
காரணமாக, சிறுநீரக பாதிப்புகள், சிறுநீரக செயல் இழப்புகள், மிக அதிக இரத்த
அழுத்தம், பித்தப்பை பாதிப்புகள், அதிக உடல் எடை
போன்ற பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு, உடல் நலனில் மிகப்பெரிய
பாதிப்புகளை, உண்டு பண்ணி விடுகின்றன. மேலும், இரத்தத்தில் கலக்கும் நச்சுக்கள், உடலில் கெட்ட நீராக உருமாறி, பல்வேறு உடல்நல பாதிப்புகளை உண்டாக்கி விடுகின்றன.
இது
போன்ற பாதிப்புகளை, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை வழிகளில், மூலிகைகள் மூலம் குணமாக்க வாய்ப்புகள் உள்ளதா, என்று பலர் எண்ணியிருப்பர்.
அவர்கள்
எல்லாம், பூனைமீசை மூலிகையைப் பற்றி அறிந்திருந்தால், அந்த எண்ணத்தை விட்டுவிட்டு,
அந்த மூலிகையைக் கொண்டு வைத்தியத்தைத் தொடங்கி, பாதிப்புகளில் இருந்து சீராக விடுபட்டிருப்பர். பூனை மீசை மூலிகையா என்று ஒரு சிலர் ஆச்சர்யமாக
கேட்கலாம், ஆம் உண்மைதான் இந்த மூலிகை மற்றும் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வு
பெரும்பாலான மக்களுக்கு போய் சேரவில்லை. இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
கிராமங்களில் ஈரப்பாங்கான வயல் வெளிகளின் வரப்புகள், வாய்க்கால் கரைகள் போன்ற இடங்களில், தானே வளரும் ஒரு சிறுசெடிதான், பூனைமீசை. இதன் பூர்வீகம் ஜாவா தீவு. இதன் கிளைகளை ஒடித்து வைப்பதாலும், விதைகள் மூலமும் வளரக் கூடிய இந்த அரிய மூலிகைச்செடி ஒன்று இருந்தாலே, அதன் மூலம் நிறைய செடிகளை உருவாக்கி விடலாம், இதன் மருத்துவ குணங்களுக்காக, தற்காலங்களில், இந்தச் செடிகளை, நர்சரிகள் எனும் செடிகள் வளர்ப்பு மையத்தில், தொட்டிகளில் வளர்க்கும் வண்ணம் உற்பத்தி செய்து, விற்கின்றனர்.
துளசி
வகை சார்ந்தது :
பூனைமீசை
செடி, சிறிய இலைகளைக் கொண்டவை, இவற்றின் மலர்கள் வெண்ணிறத்தில் நீண்டு சிறு இழைகளாகக் காணப்படுவது,
பூனைகளின் முகத்தில் இருக்கும் முடிக்கு, அவற்றின் மீசைக்கு ஒப்பாக இருப்பதால், இந்தச் செடியை பூனைமீசை செடி, என்றும் அழைக்கின்றனர். துளசியின் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததால், பூனைமீசையை, சீரக துளசி என்றும்
அழைப்பர்.
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்யும் :
பூனைமீசை
செடியின் சமூலம் எனும் அனைத்து பாகங்களையும் நிழலில் உலர வைத்து, நன்கு
இடித்து தூளாக்கி வைத்துக் கொண்டு, அதில் சிறிதளவு எடுத்து ஒன்றரை தம்ளர் நீரில் நன்கு கொதிக்க வைத்து, நீர் கால் தம்ளர்
எனும் அளவில் சுண்டியதும் ஆற வைத்து, தினமும்
இருவேளை பருகி வர, சிறுநீரக பாதிப்புகள்
மெல்ல சீராகும். நெடுநாள் சிறுநீரக பாதிப்புகளால், இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல், புண்கள், நீர்க்கட்டிகள் போன்றவற்றை போக்கும்.
செரிமானக் கோளாறுகள் :
இரத்தத்தில்
கலந்த யூரியா உப்பை நீக்கி, சிறுநீரக பாதிப்பிற்காக எடுத்துக்கொண்ட மேலைமருந்துகளின் பக்க விளைவுகளான செரிமானக்
கோளாறுகள், உடல் எரிச்சல் மற்றும்
மலச் சிக்கல் உள்ளிட்டவற்றை போக்கும். மேலும், பித்தப்பை பாதிப்பால் உண்டான கல் மற்றும் கல்லீரல்
கொழுப்பை கரைக்கும்
உயர் இரத்த அழுத்தம் போக்கும் :
பூனைமீசை
சூரணத்தை நீரில் இட்டு, மூன்றில் ஒரு பங்காக்கி தினமும்
இருவேளை பருகி வர, இரத்தத்தில் உள்ள
கெட்ட கொழுப்புகள் கரைந்து, இரத்த ஓட்டம் இயல்பான நிலையை அடையும், இதன் மூலம், விரைவில்
நலம் பெறலாம்.
நச்சை அகற்றும் :
இரத்தத்தில் கலந்த நச்சுக்களைப் போக்கி, இரத்தத்தை தூய்மையாக்கும், பூனைமீசை. மசாலா உணவுகள், மது மற்றும் புகை காரணமாக, உடலில் நச்சுக்கள் கலந்து, அவை இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளாக சேர்ந்து, உடலின் இரத்த ஓட்டத்தில் அடைப்பை ஏற்படுத்தி, தடை செய்கின்றன. இதனால், ஏற்படும் பாதிப்புகள், அதிக இரத்த அழுத்தம், இதய பாதிப்புகள், சுவாச கோளாறுகள் மற்றும் பல. இத்தகைய உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும், இரத்தத்தில் உள்ள கெட்ட நச்சுக்களை அழிப்பதில், பூனைமீசை சிறந்த பலன்கள் தரும்.
உடலை வலுவூட்டும் :
பூனைமீசை
சூரணம், மிளகு சேர்ந்த பொடியை சிறிது நீரில் இட்டு சுண்டக்காய்ச்சி, மூன்றில் ஒரு பங்காக்கி, தினமும்
இருவேளை பருகி வர, இரத்தத்தில் கலந்துள்ள
நச்சுக்களை, மிகையான சிறுநீர்ப் பெருக்கின் மூலம், முழுமையாக வெளியேற்றி, உடலை புத்துணர்வூட்டி, பொலிவாக்கும்
வல்லமை மிக்கது, பூனைமீசை மூலிகை.
கொழுப்பை கரைக்கும் :
இந்த
மருந்தே, உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகளை
கரைத்து வெளியேற்றி, உடலில் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்கு நன்மைகள் தரும் நல்ல கொழுப்புகளை ஊக்கப்படுத்தும்.
கெட்ட நீரை வெளியேற்றும் :
மேலும்,
உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகள்
மற்றும் உடலின் கெட்ட நீரை, கெடுதல் தரும் யூரியா உப்பை, சிறுநீரின் மூலம் வெளியேற்றி, அதன் மூலம் அதிகமாக
உள்ள உடல் எடையைக் குறைக்கும்
தன்மை மிக்கது, பூனைமீசை.
பூனைமீசை இலை மருத்துவம்:
பசுமையான
பூனைமீசை இலைகள் கிடைத்தால், அதனை சிறிதளவு எடுத்துக்கொண்டு,
அத்துடன் சிறிது பூண்டு, மிளகு சேர்த்து நன்கு அரைத்து, சிறு இலந்தைப் பழம்
அளவுக்கு தினமும் இருவேளை சாப்பிட்டு வர, சிறுநீரக பாதிப்புகள்,
விலகி, அதிக அளவில் சிறுநீர்
வெளியேறி, உடலில் சேர்ந்த கெட்ட நீரை, நச்சு உப்புக்களை வெளியேற்றி, உடல் வலுப்பட, நன்மைகள்
தரும்.
ஜாவா டீ :
மேலை நாடுகளில் ஜாவா டீ என்று அழைக்கப்படும் பூனைமீசை தேநீர். சிறுநீரகம், இரத்தத் தூய்மையில் முக்கியமான பங்குவகிக்கும் பூனைமீசை மூலிகையில், தேநீர் செய்து பருகுவர், மேலை நாட்டினர். பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின்செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தேநீர் தயாரிக்கும் முறை :
பூனைமீசையின்
பசுமையான இலைகள் கிடைத்தால் நான்கைந்து இலைகளை நீரில் இட்டு, நன்கு கொதிக்க வைத்து, அதில் கருப்பட்டி எனும் பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால், உடலில் சேர்ந்த நச்சுக்கள் எல்லாம், இந்த மூலிகைத் தேநீரால்
ஏற்படும் அதிக அளவிலான சிறுநீர்
வெளியேற்றத்தில் கலந்து வெளியேறும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த பூனை மீசை மூலிகை தேனீரை உடனடியாக சுவைத்து பார்க்க விருப்பமா..? நமது பொதிகை இனையத்தளதிற்க்கு சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.
To order log in to www.podhigaiherbs.com
அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க
#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup
0 கருத்துகள்