பொதிகை வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், நாற்பது நாட்களில் நாற்பது வகையான கீரைகளை பற்றியும் அதன் பயன்களை பற்றியும் தொடராக பதிவிட ஆறிவித்திருந்தோம். அதன் வரிசையில் மூன்றாவது கீரையாக அப்பக்கோவை கீரை குறித்தும், அதன் அவசியம் குறித்தும் அனைவரும் தெரிந்துகொள்வோம்.
அப்பக்கோவை கீரை கொடிவகையை சார்ந்தது. அரியகோவை எனவும் அழைக்கப்படும் இக்கீரை ஈரப்ப்பசையுள்ள இடங்களில் செழித்து வளரும். வேலிகளில் படர்ந்து வளர்ந்திருக்கக் காணலாம். இதன் இலைகளை கசக்கினால் ஒருவித வாசனை வரும். இதன் பூக்கள் சிறிய மஞ்சள் நிறமானவை.
அப்பக்கோவையில் கல்சியம், பொஸ்பரசு, இரும்புச்சத்து, விட்டமின் C, விட்டமின் B ஆகியவை உள்ளன.
கோவை கீரைக்கு உரிய மருத்துவ குணங்கள் அனைத்தும் இக்கீரைக்கு உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி இருமலை ஆற்றும் சக்தி வாய்ந்தது. குழந்தைகளுக்கு சளி இருமல் இருப்பின் அப்பகோவை சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றிக் கொடுப்பார்கள். இயற்கை மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் அப்பகோவை கீரை ஒரு பயனுள்ள கீரை.
இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்:
கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.
கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், கிழங்கு அனைத்தும் மருத்துவப்பயன் கொண்டவை. மலர்கள் வெள்ளையாகவும் காய்கள் நீண்ட முட்டை வடிவ வரியுள்ளவையாகவும் பழங்கள் செந்நிறமாகவும் இருக்கும். வேர் கிழங்காக வளரும்
இரத்தம் சுத்தமடைய காற்று,நீர் இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவுகளாலும் (fast food) உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது.
மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.
இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 கரண்டி அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.
கண்நோய் குணமாக :
கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.
தோல் கிருமிகள் நீங்க தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.
கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.
உடல் சூடு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்.
இதர மருத்துவ பயன்கள்:
கோவை சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மகுதிப்படுத்தும் குணமுடையது. வாந்தியை உண்டாக்கும் தன்மையுடையது. இரத்த சர்கரையை (Blood sugar) குணப்படுத்த வல்லது.
கோவையின் ஒரு பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லி. யாகக் காச்சிக் காலை மாலை குடித்து வர உடல் சூடு, கண்ணெரிச்சல், இருமல், நீரடைப்பு, சொறிசிரங்கு, புண் ஆகியவை போகும். இதன் இலைசாறு 30 மி.லி. காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர மருந்து வேகம் தணியும்.
இயற்கை வாய்ப்புண் டானிக்:
கோவைக்காய் , கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.
இந்த தீநீர் வயிற்றுப்புண் ,
வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.
இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்
சிறுவர்களுக்கு வரும் சளி, இருமல் ஆகியவற்றை அகற்றும் ஆற்றல்
இக்கீரைக்கு உண்டு. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் அப்பக்கோவை கீரையின் சாற்றை
பாலில் கலந்து சங்கில் ஊற்றினால் பலன் கிடைக்கும்.
அப்பகோவ இலை சட்னி செய்முறை:
அப்பகோவ இலை - 4 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 150 கிராம்
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 5
புளி - பெரிய
நெல்லிக்காய் அளவு தேங்காய் - ஒரு மூடி
கறிவேப்பிலை - 4 இணுக்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அப்பகோவை இலையை நல்ல தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு எடுத்து, 2 முறை அலசிவிட்டு நீரை வடியவிடவும். 5 நிமிடங்கள் மட்டும் தண்ணீரில் போட்டு வைத்தால் போதும். அதிக நேரம் வைத்திருந்தால் இலைகள் அழுகியது போல ஆகிவிடும். (இப்படி போட்டு வைப்பதால் இலையின் மீதுள்ள மண் மற்றும் தூசிகள் தண்ணீ ரின் அடியில் தங்கிவிடும். அனைத்து வகையான கீரைகள், புதினா மற்றும் மல்லித் தழைக்கும் இது பொருந்தும்). மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பிறகு அதே வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்பகோவை இலையை போட்டு வதக்கி ஆறவைக்கவும். வதக்கி ஆறவைத்தவுடன் தேங்காய் துருவல் , புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அப்பகோவை இலை சட்னி தயார். சப்பாத்தி, இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்க்கும் பொருத்தமாக இருக்கும். மாதம் இருமுறையாவது இதை உணவில் எடுத்துகொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்க்கு மிகச்சிறந்தது.
இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள்.
https://www.podhigaiherbs.com/product/220/kabasuram-nilavempu-combo-100-g.html
To order log in to www.podhigaiherbs.com
அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க
#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ் #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup
0 கருத்துகள்