Hot Posts

6/recent/ticker-posts

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம்

 



திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்துதிரிபலா என்பது 3 பழங்களின் கூட்டுப் பொருளாகும்மருத்துவ குணங்கள் மிகுந்தநெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ஆகிய மூன்று கைகளையும் முறையாக பக்குவம் செய்து சூரணம் எனப்படும் பொடியாக தயாரிக்கப்படுவது தான்திரிபலா சூரணம்எனப்படும். பொதிகை இனையதளத்தில் மாத்திரையாக கிடைக்கிறது . அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

திரிபலா தரும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி நாம் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த சக்தி நமது உடலில் எப்போதும் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும்ஆன்டிபாடிஎனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.

செரிமானமின்மை :

சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும்.

வயிற்று பூச்சிகள்:

சாக்லேட் மற்றும் இனிப்புகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி, புழு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் அதிகரிக்கிறது. இவர்களுக்கு திரிபலா சூரணத்தை அவ்வப்போது கொடுத்து வருவதால் வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

Read About: உடல் சூடு குறைய காசினி கீரை

இரத்தசோகை:

நமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.

சர்க்கரை:

நோய் திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பதுஇன்சுலின்ஆகும். திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும்கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையானஹைப்பர்கிளைசீமியாஎனப்படும் அதீத சர்க்கரை நிலை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.

உடல்பருமன்:

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் வெகு சீக்கிரத்தில் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து திரிபலா செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

Read About: கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்

சருமப் பிரச்சனைகள்;

திரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது. மேலும்உடலின் சருமத்தில் ஏற்பட கூடிய தொற்று நோய்கள், சொறி, சிரங்கு போன்றவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த பங்காற்றுகிறது.

சுவாச நோய்கள்:

நாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.

Read About: முகப்பொலிவிற்கு பொதிகை ஹெர்பல்ஸின் முத்தான மூன்று பரிந்துரைகள்

தலைவலி:

சிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்பந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது. குறிப்பாக நமது உடலில் வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்:

நமது நாட்டில் நிகழ்த்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க திரிபலா பேருதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் எனப்படும் பெருமளவு புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து, உடல்நலனை காக்கிறது.



உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.

https://www.podhigaiherbs.com/category/17/eco-friendly-wooden-products.html

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup


கருத்துரையிடுக

0 கருத்துகள்