Hot Posts

6/recent/ticker-posts

நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் மருத்துவ பயன்கள் நிறைந்த கறிவேப்பிலை !

 கடுமையான வேலை பளுவினால் நாற்பது நாட்களில் நாற்பது கீரைகள் பதிவில் சிறிய இடவெளி விழுந்துவிட்டது. புதிய தொழில்காரனமாக அதிக பணிசுமையால் பதிவுகளை எழுத நேரம் கிடைக்காமல் போய்விட்டது, வருந்துகிறேன். முடிந்த அளவு ஒவ்வொரு நாளும் தவறாது பதிவிட முயல்கிறேன். சரி நம் பதிவிற்க்குள் செல்வோம். இன்று நாம் பார்க்கப்போவது தினமும் நாம் பயன்படுத்தும் கீரைதான். அதன் பயனறியாது கிள்ளுக்கீரையென அதை ஒதுக்கி வைத்தே பழகியிருக்கிறோம் அதை பற்றி பார்ப்போம். 


தினமும் நாம் சாப்பிடும் போது நம்மில் பெரும்பான்மையானவர்கள் உனவு தட்டில் ஒரு ஓரமாக ஒதுக்கிவைக்கப்படும் அதி உன்னதமான கிரை தான் கறிவேப்பிலை கீரை. கறிவேப்பிலை சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலைஎன்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.

நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது.

ஆனால் கறிவேப்பிலையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

இன்று ஆண்களும் பெண்களும் அதிகம் சந்திக்கும் பிரச்சனை தொப்பை தான். ஒவ்வொரு ஆனும் ஸ்லிம் பிட் சட்டை போட்டு கொண்டு இளமையாக தன்னை காட்டிக்கொள்வதைதான் விரும்புவன், அதுபோல பெண்களும் தங்கள் உடலை ஆரோக்கியத்துடன் நல்ல வடிமைப்புடன் பிட்டாக இருப்பதையே விரும்புகின்றனர், ஆனால் நுகர்வு கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட நாம் கண்ட நேரத்தில் துரித உணவுகள், கோலா பானங்கள் என கண்டதையும் தின்று உடல் பெருத்து சட்டை பட்டனை மாட்டமுடியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

Read About :கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும்  சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம்.

சரி நம்ம கறிவேப்பிலையின் மகிமைக்கு வருவோம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி தொப்பையை குறைக்க கறிவேப்பிலை உதவுகிறது.

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது

2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது

3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு

4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது

5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது

6) 7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது

8) கல்லீரலைப் பாதுகாக்கிறது

9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது: நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது

10) முடியை வலுவாக்குகிறது.

11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது

12) செரிமான மண்டலத்திற்கு நல்லது

Read About: சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கு பூனை மீசை மூலிகை தேநீர்

கருவேப்பிலையை பொடியாக செய்துகொண்டு சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். கருவேப்பிலை பொடி வீட்டிலே செய்ய சிரமப்படுவீர்கள் என்றால் பொதிகை இனையதளத்தில் தரமான கருவேப்பிலை கிடைக்கிறது, ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

https://www.podhigaiherbs.com/product/193/curry-leaves-powder-karuvepillai-podi-50-gram.html 

கருவேப்பிலை கீர்,

வாரம் இருமுறை கருவேப்பிலையை கீரினை தயாரித்து எடுத்துகொண்டால் மேற்கூறிய பயன்களை எளிதாக அடையலாம். கொண்டு. கர்பினிகளுக்கு ஏற்ற உணவு. கர்ப்ப காலத்தில் இந்த ஜூஸ் மிகவும் இன்றியமையாதது. கர்பினிகளுக்கு ஏற்ற இயற்கை இரும்பு சத்தி மிகுந்த உணவு இது. கருவை காக்கும் சிறந்த மூலிகை இந்த கருவேப்பிலை.

இவ்வளவு அற்புத சக்திகள் கொண்ட கருவேப்பிலை கீர் எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போமா.. பொதிகை வாசகர்களுக்கான தனிப்பட்ட கீர் ரெசிப்பி இது. மறக்காமல் ஒருமுறை வீட்டில் செய்துபாருங்கள் நண்பர்களே.

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை ½ கப்

தேங்காய் ½ கப்

இஞ்சி 1 துண்டு

ஏலக்காய்  1

கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை/ வெல்லம் தேவையான அளவு

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் (கருப்பட்டி தவிர்த்து) மிக்சியில் அரைத்து வடிகட்டி அதனுடன் கருப்பட்டி, நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் கலந்து குடிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் பெரும்பான்மை பெண்களுக்கு வரும் இரும்பு சத்து குறைபாட்டை போக்க இந்த பானம் மிகச்சிறந்தது.  இதை செய்து பார்த்துவிட்டு உங்கள் அனுபங்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

Read More About: முல்தானி மெட்டியின் நன்மைகள்

உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.

 https://www.podhigaiherbs.com/category/17/eco-friendly-wooden-products.html

 To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup

 

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்