கபசுர
குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள் :
யூகி
முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார்.
அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும்
வழிகாட்டியிருக்கிறார்.
நிலவேம்பு
குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு
சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர், மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை,
கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர்,
கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட
மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும்
கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும்
கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம். ISO தரத்துத்துடன் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீரை உங்கள் பொதிகை ஹெர்ப்ஸ் https://www.podhigaiherbs.com/product/6/kapa-sura-kudineer-box-50-gram.html
இணையதளத்தில்
ஆன்லைனில் வாங்கி பயன்படுத்தலாம்
ஒரு
டம்ளர் நீரை கொதிக்க வைத்து
அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து
இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து
வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக
மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.
கபசுரக்குடிநீர்
குடிப்பதால்கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குண்மாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கோரொனாவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
0 கருத்துகள்