Hot Posts

6/recent/ticker-posts

சோற்றுக்கற்றாழை! மகளிர் பிணித் தீர்க்கும் மாமருந்து!


சோப்பு, ஷாம்பு, அழகு கிரீம்கள் போன்ற பொருட்களில் பலவற்றில் ”ஆலோவேரா” சேர்க்கப்பட்டது என்று விளம்பரப்படுத்துவதைப் பார்த்திருப்போம். இந்த ஆலோவேராதான் சோற்றுக்கற்றாழை. தமிழ் மருத்துவத்தில் மிகவும் இன்றியமையாத மூலிகை. இது குமரிப் பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீக்கும் மூலிகையாக இருப்பதால், இதற்க்கு ”குமரி” என்று பெயரிட்டுள்ளனர் சித்தர்கள். அந்தளவுக்கு மருத்துவக் குணங்கள் இருந்தாலும் இதில் கவனிக்க வேண்டிய விசயம்.. சோற்றுக்கற்றாழையை வெளி மருந்தாக பிரயோகிப்பதில் பெரிதாக நன்மை கிடைப்பதில்லை. அதை உள்மருந்தாக எடுத்துக்கொள்ளும் போதுதான் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்…

Read More: மாதவிடாய் சீராக்கும் ”குமரி பக்குவம்” வீட்டிலேயே

 செய்வது எப்படி!

18 வகையான கற்றாழைகள் உள்ளன ஆனால் இன்றைய நிலையில், சோற்றுக்கற்றாழை, ரயில் கற்றாழை, நார்க் கற்றாழை ஆகிய மூன்று வகைகளைத்தான் மக்கள் அறிந்துள்ளனர். இவற்றில் நார்க்கற்றாழையை வேலிப்பயிராக பயண்படுத்துகிறார்கள். இதிலிருந்து நார் எடுத்துப் பலவிதங்களில் உபயோகப்படுத்துகிறார்கள். ரயில் தண்டவாளங்கள் அருகே சில இடங்களில் பெரிதாக வளர்ந்திருப்பவை ரயில் கற்றாழை, இத இரண்டு வகைகளும் அமெரிக்காவில் இருந்து 19, 20-ம் நூற்றாண்டுகளில் இங்குக் கொண்டுவரப்பட்டவை. தமில் மண்ணைத் தாயகமாகக் கொண்டது சோற்றுக்கற்றாழை.

இது சுமார் 3அடி உயரம் வரை வளரக்கூடியது. இதில் சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், போலிக் அமில, சுண்ணாம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், சிறியளவில் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

சூட்டை தணிக்கும்!

சித்த மருத்துவத்தில் நூற்றுக்கணக்கான தைலங்கள், லேகியங்கள், பற்பங்கல் ஆகியவை சோற்றுக்கற்றாழை கொண்டு செய்யப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையிலிருந்து எடுத்த சோற்றை (சோற்றுக்கற்றாழையில் தோலை சீவிய பகுதியைச் சோறு என்று அழைப்பர்) கழுவி அப்படியே சாப்பிட்டால் உடற்சூடு தணியும். ஆனால் குளிர்ச்சி உடம்பினர் இப்படி சாப்பிடுவது ஏற்புடையதல்ல. சோற்றுக்கற்றாழை, மாதவிடாய்க் கோளாறுகள், கருப்பைப் பலவீனம், குழந்தையின்மை ஆகிய மூன்று முக்கிய வியாதிகளுக்கு மருந்தாக விளங்குகிறது. அதோசு சூதகவாயுவை சீர்படுத்தி மோகச்சூடு மற்றும் மூலச்சூடு ஆகியவற்றைத் தன்னிலைப்படுத்தும் இயல்பு கொண்டதாகவும் இருக்கிறது.

Read More; அஸ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு எப்படி மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கிறது?

வந்த நோய்களை குணமாக்குவது மருந்து. நோய்கள் வராமல் காப்பது காயகற்பம். இந்தக் காயகற்ப முறைகள் சித்தர்கள் தமிழ்ச் சமூகத்துக்கு விட்டுச் சென்ற மாபெரும் அறிவுக்கொடை. அந்த வகையில் தேரான் என்னும் சித்தர் “வற்றாக்குமரி தன்னை வற்றலென் வுண்ணின்” எனத் தொடங்கும் பாடலில், கற்றாழையை உலர்த்தி உண்டுவர இளமையாகவும் வன்மையுடனும் நூறாண்டுகள் வாழலாம் என் எழுதியுள்ளார்.

நன்கு கழுவி எடுக்கப்பட்ட கற்றாழைச் சோற்றை 3 முதல 5கிராம் வரை திரிகடுக சூரனத்துடன் (சுக்கு மிளகு திப்புலி பொடிகள்) சேர்த்து நாட்டுச் சர்க்கரை, நெய் சேர்த்து பிசைந்து காலையில் மட்டும் 48 நாட்கள் உண்டு வந்தால் தோல் பிணிகள், மூலம், பெளத்திரம் ஆகியவை நிரந்தரமாக குணமாகும்.

Read More; காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்

 கற்றாழைச் சாறு!

மற்ற மூலிகைகளைப்போல தண்ணீர் சேர்த்து இடித்தோ, பிழிந்தோ கற்றாழையில் சாறு எடுக்க முடியாது. கற்றாழைச் சோறு வழவழப்பாக இருப்பதால், இடிபடாது. இதற்கென் சிறப்பான முறையைக் கையாண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நன்றாக கழுவப்பட்ட கற்றாழைச் சோறுடன் சிறிது நெல் உமி சேர்த்துப் பிசைந்து ஒரு துணீயில் பொதிந்து கட்டித் தொங்கவிட்டு, கீழே ஒரு பாத்திரத்தை வைத்து விட்டால் 5 மணி நேரத்தில் சோற்றில் உள்ள சாறு முழுவதும் வடிந்துவிடும். உமிக்கு பதிலாக கடுக்கய்ப் பொடி அல்லது படிகாரப் பொடியும் சேர்க்கலாம். படிகாரப்பொடி சேர்த்துக் எடுக்கப்பட்ட கற்றாழைச் சோற்றை கண் வலியின் போது கண்களில் விட்டால் ஒரே நாளில் குணமாகும்.


அனைத்து இயற்கை மூலிகைகளையும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியவை. நம் பொதிகை இனையதளத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம். தொடர்புக்கு 7200931131 / 9840494462



                www.podhigaiherbs.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்