Hot Posts

6/recent/ticker-posts

கோடைக்கேற்ற இயற்கை மூலிகை குளிர்பானங்கள்

 


சிறிதும் இரக்கமின்றி அனலை கக்கும் சூரியனின் அக்கினிபார்வையால் வியர்வை தாகம் உடல்சோர்வு என பல பிரச்சனைகள் உடலை வாட்டி வதைக்கிறது இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? (how to make summer drinks at home)

உடலை உருக்கும் வெயிலால் உடனடியாக இழந்த நீர்த்துவத்தை உடல் பெற்றிட கனிமச்சத்து நிறைந்த அற்புத மருந்து இளநீர். கோடையில் அடிக்கடி உலரும் தொண்டைக்கு குளிரூட்டுவதுடன் வாய்ப்புண், வயிற்றுப்புண் இவற்றையும் நீக்கும் ஆற்றல் இதற்க்கு உண்டு.

வைட்டமின்கள் பி1,பி6, பி12, விட்டமின் சி மற்றும் இரும்பு , பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து, பொட்டாசிய சத்து ஆகியவை அடங்கிய ஐஸோடானிக் கலவை இள நீர் மொத்தத்தில் கோடைகாலத்தில் இளநீர் உங்கள் சாஸ்ஸாக இருக்க வேண்டும்.

இளநீருக்கு அடுத்தப்படியாக கோடைக்கு ஏற்றது வெள்ளரிக்காய். கோடையில் உடல் நீர்த்துவம் வியர்வையால் அதிகம் வெளியேறும். அதனால் உண்டாகும் செறிவுற்ற சிறு நீர், கழிக்கும் போது எரிச்சலைத் தரும். நீர்க்கட்டு, சிறு நீரகக் கல் அதிகரிக்கும். இந் நேரத்தில் வெள்ளரி சிறு நீரைப் பெருக்கி கற்களை வெளியேற்றி எரிச்சலைக் குறைக்க உதவும். இதன் விதைகளை அரைத்து அடிவயிற்றில் பற்றிட நீர்க்கட்டு உடனே நீங்கும்.

இள நீரைப் போல  electrolyte  நிறைந்த குளிர்பானம் தர்ப்பூசனி தாகம் தணிப்பதுடன் மேக நோயில் வரும் வெள்ளைப் போக்கு சிறு நீர் எரிச்சல் இவற்றையும் நீக்கும். தர்பூசனி பெண்ணுக்கேற்ற குளிர்பானம்.

 நாம் குடிக்கும் தண்ணீர் சேகரித்து வைத்துள்ள கலத்த்தில் ( மண்பாண்டமாயிருத்தல் நன்று) வெட்டி வேரை துணியில் சிறு முடிச்சாக போட்டு ஊற வைக்க, அத்தண்ணீர் சுவை கூடுதலாயிருப்பதுடன் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

ரோஜாப்பூ, குல்கந்து (தேனில் ஊற வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.  ஒரு டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து, அதனை குடிக்க வேண்டும். அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிட வேண்டும்.

அமிலத்தன்மை மற்றும் இதுதொடர்பான பிற பிரச்சினைகள் உள்ளவர்கள் பாலில் குல்கந்துவை சேர்த்து உட்கொள்ளலாம். சிறிது குளிர்ந்த பால் எடுத்து, ஒரு டீஸ்பூன் குல்கண்ட் சேர்த்து பருகுங்கள். இல்லையெனில் குல்கந்துவை வெறுமனே கூட சாப்பிடலாம். அல்லது வெத்தலையில் வைத்து மடித்து அதனை சாப்பிடலாம்.

 அக்கினிச்சூட்டின் காரனமாக உடல்சூடு அதிகரித்து சிறு நீர் வராமல் விழி பிதுங்கி அவதியுறும் இந்த அனல் காலத்தில் தடாலடியாகச் சூடு தனிய இன்ஸ்டண்ட் மூலிகை மருந்து “ பானாகாரம்” தான்.


தெற்கத்திக்காரருக்குப் பரிச்சயமான ”பானாகாரம்” செய்ய பனங்கருப்பட்டி, சிறுதுண்டுப் புளி குளிர்ந்த நீர் போதும். கருப்பட்டியையும் , புளியையும் நீரில் கரைத்து அரைக் குவலை அளவு பருக சிறு நீரின் காரத்தன்மை (Alkalinity ) உடனடியாகக் குறைந்து சூடு தனிந்து சிறு நீர் சிரமமில்லாமல் பிரியும்.

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள் | Karuppu Kavuni rice/ Black Rice benefits

கோடைக்கால உணவுக்கான சில டிப்ஸ்!

அதிக உப்பு மற்றும் உறைப்பு இல்லாத உணவு, எண்ணெய்ச் சத்து அதிகமில்லாது சமைத்த காய்கறி நல்லது. இனிப்பிற்கு பனங்கற்கண்டும் நேனும் சிறந்தது, பருகுவதற்கு கரும்புச்சாறு, மாதுளைச்சாறு நல்லது. உணவாக அரிச்யில் ஆக்கியவையே ஏற்றது. கோதுமை கண்டிப்பாக தவிர்க்கவும். கோடைக்காலத்தில் இரவில் அதிக நேரம் விழித்திருந்தாலும் கூட உடலுக்குக் கேடு. வீடுகளின் ஜன்னல் புறங்களில் வெட்டி வேர் (Coleus Vettiveroides Root)கீற்றுகளால் நெய்யப்பட்ட தட்டிகளைப் போடுதல் குழந்தைகளுக்கு வேனற் கட்டிகள் வராது தடுக்கும். 

Read more : ஆவாரையின் அற்புதங்கள்

தலையை சீவிய பின் கலைத்துப்போடுவதும், தலையில் எண்ணெய் வைத்தால் என் தலை என்ன சைனீஸ் ரெஸ்டாரெண்டா? எனச் சண்டைக்கு வரும் இளையத் தலைமுறையும் இப்போது அதிகம். உடலில் அதிகரிக்கும் பித்தச் சூடுதான் சாதாரன வாயுத்தொல்லை முதல் குழந்தைப் பேறின்மை (Infertility) வரை முக்கிய காரணம். எனவே, ஒள்வைப்பாட்டியின் அறிவுரைப் படி ”சனி நீராட” எண்ணெய்க் குளியலும், மற்ற ஆறு தினங்களிலும் தலைக்கு குளித்து, பின் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2, 3 மணி நேரமாவது தலையில் எண்ணெயுடன் இருப்பது முடிக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது.

Read More: தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...!

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால் மேனியில் அம்மை, அக்கி, வேனல்கட்டி போன்ற துன்பங்கள் வர விடாமல் தடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆதவனின் அக்கினி பார்வையில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்