சுக்கையும் மிளகையும் அறிந்த அளவுக்கு, நம் புதிய தலைமுறை திப்பிலியை அறிந்திருக்கவில்லை. மிளகைப் போன்றே மிக முக்கிய மருத்துவக் குணம் உடையது இது. “கட்டி எதிர்நின்ற கடும் நோயெல்லாம் பணியும்” என தேரன் சித்தர் சிலாகித்துப் பாடிய இந்த திப்பிலி, சாதாரண சளி, இருமல் முதல் இளைப்புநோய் வரை குணப்படுத்தும். இளைப்புநோய் என்பது குழந்தைகளை எடை குன்றச்செய்து, காயச்சலும் சளியுமாய் இருக்கச்செய்யும் இளங்காசம் எனும் பிரைமரி காம்ப்ளக்ஸ் தான்.
சித்த மருத்துவ மருந்தான திப்பிலி ரசாயனம், ஆஸ்துமா நோய்க்கென கொடுக்கப்படும் மிகச் சிறந்த தடுப்பு மருந்து. திப்பிலையைப் பிரதானமாகவும், இன்னும் பல சளி நீக்கும் உலர் மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த மருந்து, சித்த மருந்துகளில் ஆஸ்துமாவுக்கான மருந்துப் பட்டியலில் தலையானது.
பல
நோய்
போக்கும்
மிளகைவிட
அதிகக்
காரமும்
வெப்பத்தன்மையும்கொண்ட
இந்தத்
திப்பிலியை
கைப்பக்குவ
மருந்தாக
வீட்டில்
பல
வகையில்
பயன்படுத்த
இயலும்.
இளவறுப்பாய்
வறுத்துப்
பொடித்த
திப்பிலிப்
பொடியை,
3 சிட்டிகை
அளவு
எடுத்துக்கொண்டு,
வெற்றிலைச்சாறும்
தேனும்
சேர்த்துக்கொடுக்க,
நுரையீரலிலிலிருந்து
வெளியேற
மறுக்கும்
கோழையை
வெளியேற்றி
இருமலைப்
போக்கும்.
கபம்
நெஞ்சில்
கட்டிக்கொண்ட,
மலச்சிக்கலும்
உள்ள
குழந்தைகள்
அல்லது
முதியோருக்கு,
மலத்தை
இளக்கி
வெளியேற்றி
கபத்தைக்
குறைப்பதுதான்
ஆஸ்துமா
நோய்கான
தீர்வைத்தரும்.
இதற்கு,
திப்பிலி
பொடியையும்,
கடுக்காய்
பொடியையும்
சம
அளவு
எடுத்து,
தேன்
சேர்த்து
உருட்டி
இரவில்
கொடுக்கலாம்.
உடலெங்கும்
பரவி,
போக
மறுக்கும்
சாதாரணப்
பூஞ்சையை
நிரந்தரமாகப்
போக்க,
மேலுக்கு
சீமையகத்திச்
சாறு
போடுவது,
நலுங்கு
மாவு
போட்டுக்
குளிப்பதைத்
தாண்டி,
தினம்
ஒரு
வேளை
திப்பிலி
பொடியை
2 சிட்டிகை
அளவு
சாப்பிடுவது
நல்லது
என்கிறது
சித்த
மருத்துவம்.
வால்மிளகின் அற்புத மருத்துவ குணங்கள் !!
அதி அற்புதம் வாய்ந்த சுக்குவின் மருத்துவ குணங்கள்
மூலம்:
கல்லீரல், மண்ணீரல்:
சுவாச நோய்கள்:
ஆஸ்துமா, ப்ராங்கைட்டிஸ், மார்பு சளி போன்ற வியாதிகள் நமது நுரையீரலை பாதிப்பதாகும். இந்நோய்கள் வந்தால் சராசரியாக சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை தருகிறது. இத்தகைய நோய்கள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீக்கிரத்திலேயே மார்பு நுரையீரலை பாதிக்கும் அனைத்து சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.
காய்ச்சல்:
மாதவிடாய்:
மாதவிடாய் காலங்களில் பல பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து அவர்களை உடலளவில் மிகுந்த பலவீனமானவர்கள் ஆக்குகிறது. பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கும் வெள்ளைப்படுதலும் இருந்தால், திப்பிலி 30 கிராம், தேற்றான் கொட்டை 30 கிராம் அரைத்துப் பொடித்து, காலை வேளையில் மூன்று சிட்டிகை சாப்பிட்டுவர நீங்கும் என்கிறது, சித்த மருத்துவ குணபாட நூல்.
நாட்டுமருந்துக் கடையில் அரிசித்திப்பிலி, யானைத்திப்பிலி என இரண்டு வகை கிடைக்கும். அரிசித்திப்பிலி, எனும் சன்னமாக சிறிதாக இருக்கும் திப்பிலிதான் மருத்துவத்துக்கு மிகவும் சிறப்பானது. உதிராது, உலர்ந்து முழுமையாய் இருக்கும் இதனை வாங்கி, இளவறுப்பாக வறுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வப்போது, இது விளையும் சீசனில் வாங்கிப் பத்திரப்படுத்தி ஃப்ரெஷாகப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
ஆர்கானிக் முறையில் தரமான திப்பிலியை முழுதாகவும் பொடியாகவும் www.podhigaiherbs.com இணையதளத்தில் வாங்கலாம்
0 கருத்துகள்