Hot Posts

6/recent/ticker-posts

காலத்தை வென்ற "மூலிகை டாக்டர்கள்

 


1. சுக்கு-- "சுள்ளுன்னுகாபி சாப்பிடுங்க:

"சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லைசுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியில்லைஎன்பது வழக்குதலைவலிபிரசவ கால குமட்டல் (Nausea in pregnancy) இரண்டுக்கும் சுக்கு முதல் மருந்துதினமும் காலையில் காபித் தூளுக்குப் பதிலாக சுக்குத் தூளும் மல்லித் தூளும் போட்டுசர்க்கரை கலந்து சுக்கு-மல்லி காபி சாப்பிட மூக்கடைப்புதலைவலிஉடல் பித்தம் காணாமல் போகும்சுக்கைப் பயன்படுத்தும்போது மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

2. மிளகு-- "அலர்ஜிஓரம்போ:

 

"அலர்ஜி', "நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு' --இந்த இரண்டும் பெருவாரியாக தற்போது கேள்விப்படும் துன்பங்கள்நவீன மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வின்றி தவிப்போருக்கு மிளகு ஓர் அருமருந்துநோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட (Immuno Modulation) மிளகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்ஆஸ்துமாசைனுசைட்டீஸ்கரப்பான் எனும் எக்ஸிமாதிடீர் அரிப்பு மற்றும் தடிப்பை உருவாக்கும் "அர்டிகேரியாநோய்க்கு மிளகும்மிளகால் ஆன மருந்தும் உதவிக் கரம் நீட்டும்.

3. திப்பிலி-- "லொக்குலொக்குஎங்கே?


 

காலை எழுந்ததும் சளி கட்டி வரும் இருமலாகட்டும்புகை பிடிப்பதால் ஏற்படும் இருமலாகட்டும்குழந்தைகள் அவதிப்படும் இளம் காச நோயாக இருக்கட்டும் ("பிரைமரி காம்ப்ளக்ஸ்') திப்பிலி இருக்க பயம் ஏன் என்று கூறலாம்திப்பிலியை வெற்றிலைச் சாறுதூதுவளைச் சாறில் பாவனம் செய்து (மூழ்கவைத்துக் காய வைத்தல்.) பின் பொடி செய்து வைத்துக்கொண்டுசிட்டிகை அளவு தேனில் குழைத்துச் சாப்பிட இரண்டு-மூன்று வேளயில் இருமல் மறையும்.

4. ஆடாதொடை-- சளியை இளக்க "ரெடி':


நுரையீரல் மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வர மறுக்கும் சளியை இளக்கி (Mucolysis) வெளியேற்றும் ஆடாதொடைசளி-இருமலுக்கான சிறந்த மருந்துஇதில் உள்ள Bromhexine சத்துசளியை இளக்குகிறதுகரகரக்கும் தொண்டையால் (பாடகர்கள் கவனிக்க...) குரல் மழுங்கும் நோயிலும் (Vocal Chord Polyp) ஆடாதொடை-மிளகு கஷாயம் பலன் அளிக்கும்ஆடாதொடை வேறு-ஆடுதின்னாபாளை வேறு--குழப்பம் வேண்டாம்ஆடாதொடை-உள் மருந்துஆடுதின்னாபாளை-வெளிப் பிரயோக தைலத்தில் மட்டுமே பயன்படுவது.

5. துளசி-- "முதல்வனேமுதல்வனே':

துளசி மாடத்தை இறைவனின் இறைப்பிடமாகக் கருதுவோர் பலர்காக்கும் கடவுளின் வடிவமான துளசிஉடலை நோயின்றியும் காக்கும் என்பது சித்தர் கூறும் உண்மைசளியுடன் வரும் Influenza எனும் விஷக் காய்ச்சலுக்கு துளசிச் சாறுடன் தேன் சேர்த்து சுரசம் (சுட வைப்பதுசெய்து கொடுக்க காய்ச்சல் தணியும்வைரû எதிர்க்கும் ஆற்றலும் செயலிழக்கும் திறனும் கொண்ட துளசிமழை-குளிர் காலத்து முதல் மருந்து.

6. தூதுவளை--- மூக்குக்கு நண்பன்:


 எப்போதும் இருமல்சளியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு உணவிலும் மருந்திலும் தடுப்பாற்றல் கலந்து தர வேண்டும்தூதுவளை கீரையில் ரசம்தூதுவளை பழங்களைத் தேனில் ஊற வைத்துத் தருவது சளியைத் தடுக்கும்இதில் உள்ள "Solunine" வேதிப்பொருள் சளியை அறுத்து வெளியே எடுப்பதாக கட்டியம் கூறுகிறது மருத்துவ அறிவியல்.

7. நொச்சி-- ஒரே கல்லில் பல மாங்காய் !

 

அடுக்குத் தும்மல்மூக்கடைப்புதலைவலி---விளைவுகண்-முகமெல்லாம் சற்று வீங்கி அவதிப்படுவோர் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமாநொச்சி இலையைப் போட்டு ஆவி பிடியுங்கள்நொச்சி இலை கஷாயத்தில் இருந்து வரும் ஆவி பிடிக்க, "சைனஸ்பதிவுகளில் தங்கி வலியும் அடைப்பும் தரும் நீர் வெளியேறி சுவாசப் புத்துணர்ச்சி கிடைக்கும்இதன் இலையில் உள்ள aroma oil-I, எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள மூட்டுகளில் ஒற்றடமிடும்போதுஆவி வெளியேறி மூட்டு வலியையும் நீக்கவும் பயன்படுகிறது.

8. அரத்தை--- சளிஇருமலுக்கு "குட்பை':

Galangal root என்று அழைக்கப்படும் அரத்தையில் இரண்டு வகைசிற்றரத்தைபேரரத்தை என்பன அவைஅதில் சிற்றரத்தை சளிஇருமல்நெஞ்சில் சளி கட்டி வர மறுக்கும் கோழை இருமலுக்கு சிறந்த மருந்துகுழந்தைகளுக்கு இருமலுடன் தொடரும் வாந்தி தணிய சிற்றரத்தை ஒரு சிட்டிகை கொடுத்தால் போதும். Galangin" எனும் இதன் உட்பொருள் மூட்டு வலிக்கும் சிறந்தது.


9. சீந்தில்--- "சைனுசைட்டீஸ்எங்கே?

குடிசி வேர் என்றும் இதற்குப் பெயர் உண்டுதமிழகம் முழுவதும் பரவலாக வளரக்கூடிய இக் கொடிபிற தாவரங்களில் படர்ந்து வளர்ந்திருக்கும்காய்ச்சல்நீர்க் கோர்வையுடன் கூடிய மூக்கடைப்பு (Sinusitis), "அலர்ஜிஎனும் ஒவ்வாமை நிலைகளில் நோய் எதிர்ப்பாற்றலைச் சீர்படுத்த (Immuno modulation) சீந்திலின் பணி சிறப்புஆங்ழ்க்ஷங்ழ்ண்ய் எனும் கசப்புப் பொருளால்தான் சீந்திலிற்கு இம் மருத்துவ குணம்ரத்த சர்க்கரை அளவையும் சீந்தில் கட்டுப்படுத்தும்---சர்க்கரை நோயாளிகள் கவனிக்க...

11. வேம்பு--- மருத்துவப் பொக்கிஷம்: 


பிரபஞ்ச போர்வையில்மேலை நாட்டவரால் கவர நினைக்கப்பட்டுமுறியடிக்கப்பட்ட நமது பாரம்பரிய சொத்துஅம்மனுக்கு அருள் வந்தாலும், "அருளுக்குஅம்மன் வந்தாலும் தேட வேண்டியது வேப்பிலையைத்தான்சாதாரண வயிற்றுப் புழுவிலிருந்து விஷக் காய்ச்சலை உருவாக்கும் தட்டம்மை (Measles) வரை "ஆன்டிசெப்டிக்'-ஆகவும், "ஆன்டி-வைரல்'-ஆகவும் பலன் தரும்வேம்பிலுள்ள "azadirrachtin" வேதிப் பொருள் மண்ணையும் உணவுப் பயிரையும்கூட காக்கும் உயிர் மருந்தாகும்.

12. நில வேம்பு--- காலத்தை வென்ற "புரூஃபன்':

இதை "காய்ச்சலுக்கான கை மருந்துஎனலாம்காய்ச்சலை உடனடியாகக் குறைக்கும் நில வேம்புஜுரத்தைத் தரும் காரணிகளான வைரஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் படைத்ததுஉடல் வலியுடன் கூடிய ஜுரத்துக்கும் குளிர் உதறலுடன் கூடிய மலேரியா ஜுரத்துக்கும் நில வேம்புஒரு கைப்பிடி எடுத்து கஷாயமிட்டு 100 மி.லிஅளவு இரு வேளை கொடுக்க ஜுரம் நீங்கும்.



13. கீழாநெல்லி--- மூலிகைகளின் "சூப்பர் ஸ்டார்'

தமிழனை தரணியில் தலைநிமிரச் செய்த மூலிகைஹெபடைடிஸ்-பி எனும் கொடிய வைரஸ் நோயினால் பாதிப்புற்ற கல்லீரலை நோயிலிருந்து மீட்கவைரஸின் செயல்திறனை அழிக்ககீழாநெல்லிக்கு இணை கீழாநெல்லிதான்மருத்துவ அறிவியல் கொடுத்துள்ள அங்கீகாரம் இது.





14. கரிசலாங்கண்ணி--- "முடி', "குடிகாக்கும்:

"பருப்பில்லாமல் சாம்பாரா?' என்பதுபோல் கரிசாலை இல்லாது கூந்தல் தைலமா எனக் கேட்கலாம்கூந்தல் அல்லது தலைமுடியைக் காக்க கரிசாலைச் சாறு கலந்து காய்ச்சிய தைலம் கட்டாயம் தேவைமயிர்ப் பிரச்சினை மட்டுமல்லாது உயிர்ப் பிரச்சினைக்கும் உதவிடும் கரிசாலைஆம். "Cirrhosis of the liver' என்று அழைக்கப்படும் கல்லீரல் சுருக்க நோயை (பொதுவாக நிரந்தர "குடி'காரர்களுக்கு இப் பிரச்சினை வரும்.) குணப்படுத்தும்ஹெபடைடீஸ் பி மஞ்சள்காமாலையையும் கட்டுப்படுத்துவதில் கீழாநெல்லிக்கு இணை கரிசாலைதான்.

16. வெட்டிவேர்-- பானைக்குள் ஒரு "மந்திரவாதி':

வெட்டிவேரு வாசம்குடிக்கும் பானைத் தண்ணீருக்குள் "இவர்இருந்தால் போதும்--உடலின் அதிக பித்தம்உடல் சூட்டைத் தன் வசம் உள்ள நறுமண எண்ணெய்யால் குணப்படுத்தும் பேராளன்நீரும் மணக்கும்சிறுநீர் எரிச்சலும் போகும்.



அனைத்து இயற்கை மூலிகைகளையும் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியவை. நம் பொதிகை இனையதளத்தில் ஆன்லைன் மூலம் எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம். தொடர்புக்கு 7200931131 / 7550017689

www.podhigaiherbs.com


கருத்துரையிடுக

0 கருத்துகள்