மாதவிடாய் சீராக்கும்
”குமரி பக்குவம்”
குமரி பக்குவம் தயாரிப்பு முறை
தேவையானவை:
சோற்றுக்கற்றாழைச்சோறு – 250 கிராம்
பனை வெல்லாம் - 500 கிராம்
பூண்டு (விழுதாக
அரைத்தது) 50 கிராம்
வெந்தயப்பொடி
– 25 கிராம்
செய்முறை:
சோற்றுக்கற்றழைத்
ஒரு பக்க மேலை தோலை மட்டும் நீக்க வேண்டும். பிறகு தேக்கரண்டி கொண்டு சுரண்டி எடுத்தால்
கண்ணாடித் துண்டுகள் போன்ற சோறு கிடைக்கும். இதை மீன் கழுவுவது போன்று ஏழு முறை புதிய
தண்ணீரில் அலசிக் கழுவ வேண்டும். இப்படிக் கழுவுவதால் அத மஞ்சள் பிசுபிசுப்பு திரவம்
நீங்கிவிடும், பிறகு மிக்சியில் போட்டு அரைத்து சாறாக்க வேண்டும்.
Read More: காலை நேரக் கரிசாலை பானம்!
வெந்தயத்தை
வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும், பனை வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீர் சேர்த்துக்
கரைத்து மண் தூசி இல்லாமல் வடிகட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சாறு பனைவெல்லாக்
கரைசல், பூண்டு விழுது, வெந்தயப்பொடி ஆகியவற்றை இட்டு அடுப்பிலேற்றி நன்றாக கிளறவேண்டும்.
இது அல்வா பதம் வந்தது இறக்கி ஆறவிட வேண்டும். இதுதான் ”குமரி பக்குவம்”
இதை இரண்டு
தேக்கரண்டி அளவு தினமும் உண்டு வர மாதவிடாய் சுழற்சி சீராகும். கருப்பை பலப்படும்,
வெள்ளைப்படுதல் குணமாகும், மூலச்சூடு குறைந்து மூலம் மலச்சிக்கல் ஆகியவை தீரும். குழந்தை
பேறு இல்லாத தம்பதிகள் சாப்பிட்டு வர நன்மை கிடைக்கும். குறிப்பாக மகளிருக்கு வரும்
பினிகள் அத்தனைக்கும் அருமருந்து இது.
இனிப்பாக இருப்பதால்
இதை ஜாம் போல பயன்படுத்தலாம்.
தொடர்ந்து எத்தனை
நாட்கள் சாப்பிட்டாலும் நன்மையேயின்றி எள்ளளவும் தீமை இல்லை. இதனால் முகமும் உடலும்
பொலிவு பெறும். இதையே சித்த மருத்துவம் காயகல்ப முறை என்று விளக்கியுள்ளது. உடல் சூட்டினால்
உண்டாகும் வாய்ப்புண், வயிற்றுப்புண் மூலச்சூடு, கண் எரிச்சல் போன்றவற்றை இது குணமாக்கும்.
#கற்றாழை #குமரிபக்குவம் #மாதவிடாய் #மூலச்சூடு #Aloevera #kumaripakkum # menses #irregularperiods #Panaivellaim #venthayam # fenugreek #Healthylife #Podhigaiherbs #Positivequotes #Herbal #herbalpowders #Organicproducts #Motivation #Manjalkarisalai #manjalkarisalai, #Falsedaisy #Healthbenefits #podhigaherbs #podhigaiblogs #Tamilmedicine #Siddharkal #Tamilancientmedicine #musumusukkai #herbalpowders
0 கருத்துகள்