Hot Posts

6/recent/ticker-posts

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் நாம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன...?

மனிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில்  நாம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன...?

'இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான்' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ்

1.     சிறுவயதிலேயே நாம் வாழும் சூழலை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்பாடு போன்றவை பற்றி குழந்தைகளுடன் உரையாடுங்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இயற்கை  நமக்கு அள்ளித்தரும் வளங்களை மனிதனால் உருவாக்க இயலாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

  •     இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், காட்டுயிரிகள், காற்று மண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.








மனித இனம், விலங்கினம், பறவையினம், தாவர இனம், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்த சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது. இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன என்பதை எடுத்துக்கூறுங்கள்.
  •  பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக, மரக்கன்று ஒன்றை வீட்டிலேயே நடச்செய்து அவர்களை பராமரிக்கச் செய்யுங்கள். அதன் வளர்ச்சி குழந்தைகளை மகிழ்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு செல்லும். மரங்களின் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள். இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி அவர்களை இயற்க்கையின் காவலர்களாக வளர்த்தெடுக்கலாம்.
 இயற்கைக்கு முரணான பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியுடன் இருங்கள். சுற்றுச்சூழலுக்கு எதிரியான ப்ளாஸ்டிக் ( நெகிழி) பொருட்களை அறவே தவிருங்கள். ப்ளாஸ்டிக் பொருட்களின் தீமைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.



குழந்தைகள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை அனுமதிக்காதீர்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொதிகை
மூங்கில் பாட்டில்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.







வீடுகளில் மூங்கில் மற்றும் மர சாமான்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.










ப்ளாஸ்டிக் கைபைகள், பாலிதின் கவர்களை இன்றே கைவிட்டு, பொதிகை சனல் பைகளை பயன்படுத்த தொடங்குங்கள். என்னற்ற வடிவங்களில் மிக அருமையாக கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட் பொதிகை சனல் பைகளை வாங்கி பயன்படுத்த தொடங்குங்கள்.





'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல, புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்பதை உணர வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும். கடைகளுக்குத் துணிப்பைகளையோ பொதிகைசனல் பைகளையோ துாக்கிச் செல்ல வேண்டும். து பொதிகை சனல் பைகளை பயன்படுத்தினால் நமக்கும், எதிர்காலச் சந்ததியினருக்கும் துக்கம் இல்லை.

பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம்.

இயற்கையை நேசிப்போம்! இயன்றதை யாசிப்போம்!-

எதிர்கால சந்ததிக்கு சிறந்த சூழ்லை அமைத்துக்கொடுக்க பொதிகை இனையதளத்துடன் கை கோருங்கள்




கருத்துரையிடுக

0 கருத்துகள்