Hot Posts

6/recent/ticker-posts

வால்மிளகின் அற்புத மருத்துவ குணங்கள் !!

 

 

1.      வால் மிளகு: வால்மிளகு (Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர் பெற்றது. இதன் மணத்திற்காக சமையலில் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படுகிறது.

 வால்மிளகின் மருத்துவ குணங்கள்:-



1. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன

2. மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

3. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் பயன்படுகிறது.

4. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. 5. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது.

6. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.

7. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.

வால்மிளகின் விரிவான மருத்துவப் பயன்கள்( Health Benefits of Tailed Pepper):



* மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

* மிளகு, சுக்கு, சிற்றரத்தை, அதி மதுரம் ஆகிய இவற்றை சமமாக எடுத்துக் கஷாயம் செய்து மூன்று வேளை குடித்து வர ஜலதோஷத்தோடு உள்ள ஜூரமும் இருமலும் குணமாகும்.

* சின்ன வெங்காயம், மிளகு, கிராம்பு இவைகளை மையாக அரைத்து சிறிது தேனில் கலந்து சாப்பிட்டு வர, நெஞ்சுவலி நீங்கும்.

* அடுக்குத் தும்மல் பிரச்சனை அடிக்கடி வருகிறதா? எனில், மிளகை தூள் செய்து அந்தப் பொடியை நெருப்புத் தணலில் இட்டு அதிலிருந்து வரும் புகையை இழுக்க அடுக்குத் தும்மல் நின்று விடும்.

* மிளகுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் இளைக்கும். சளித் தொல்லை இருக்காது.

* இருமல் தொந்தரவு இருந்தால் டீ அல்லது பாலில் மிளகு, ஏலக்காய், இஞ்சி, ஓமம் ஆகியவற்றை அரைத்துப் போட்டு குடியுங்கள் இருமல் பிரச்சனை நீங்கும்.

* நொச்சி இலையுடன் ஒரு தேக்கரண்டி மிளகை தட்டிப் போட்டு கஷாயம் வைத்துக் குடித்தால் மலேரியா ஜுரம் கட்டுப்படும்.

* கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சிறிது சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

* மிளகை தினமும் சமையலில் பயன்படுத்தி வர பல் வலியில் இருந்து முடக்கு வாதம் வரையிலான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும்.

* மிளகை கடித்துச் சாப்பிட்டால் பல் ஈறுகளுக்கு பலம் கிடைக்கும்.

* மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

* ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் மிளகைப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.

* வயிறு மந்தமாக இருந்தால் கால் தேக்கரண்டி அளவு மிளகுப் பொடியை மோரில் கலந்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும். இது தவிர, வாயு சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மிளகு அரும் மருந்தாக உள்ளது.

* மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.

* கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குணமாகும் .

* ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

* மிளகைப் பொடி செய்து குழந்தைகளுக்கு முட்டை ஆம்லெட் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

* மிளகை தட்டிப் போட்டு காய்ச்சிய பாலில் அதனை போட்டு இரவில் குடித்தால் ஜலதோஷம் தலைபாரம் குறையும்.

* மிளகு சேர்த்து சமைக்கின்ற உணவு சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.

* மிளகு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா எல்லாம் சேர்த்து அரைத்த விழுதை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறு நீங்கும்.

* ஏழு, எட்டு மிளகை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்தத் தண்ணீரைக் குடித்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

* மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

* தினமும் பத்து மிளகை உண்டு வர ரத்தம் சுத்தமாகும்.

* மிளகை தினமும் உணவில் சேர்த்து வர செரிமான சக்தி அதிகரிக்கும்.

* கனிந்த வாழைப் பழத்தின் உள்ளே மிளகுப் பொடியை வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் விரைவில் ஆஸ்துமா நோய் குணமாகும்.

* மிளகு, ஜாதிக்காய், சந்தனம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருத் தொல்லைகள் வராது. முகம் பளபளக்கும்.

வால் மிளகு பெரும்பாலும் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். நமது பொதிகை ஹெர்பல்ஸ் இணையதளத்தில் எளிதாக ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பார்கள்  



 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்