Hot Posts

6/recent/ticker-posts

சோற்றுக் கற்றாழை ஒரு அதிசயத் தாவரம்

 


தேடிய சொர்க்கம், அதிசயத் தாவரம், கிராமங்களின் மருந்தகம் எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படும் கற்றாழை அழகுக் குறிப்புகளின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது. சித்த மருந்துவர்களால்குமரிஎன்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

எப்பொழுதும் வாடாத பெரணி வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.

கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை கருங் கற்றாழ, செங்கற்றாழ, இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறதுஇலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும்ஆலோக்டின்பிஎனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம்மூசாம்பரம்எனப்படுகிறது.

தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன. இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.

கற்றாழை ஒர் ஆல் இன் ஆல் அழகு பொருள். சருமம் கூந்தல் என எல்லாவற்றிற்கும் அதனை பயன்படுத்தலாம். நமது சருமத்திற்கு மிகச் சிறந்த பொலிவை தருவதில் கற்றாழைக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம்.

மிகவும் எளிதாக நமக்கு கிடைக்கும் கற்றாழையின் பயன்கள் மற்றும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.

கற்றாழையின் பயன்கள்: (Health benefits of Aloevera) :

  • முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற
  • சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும்
  • காயங்கள் மற்றும் பூச்சிக்கடியில் இருந்து பாதுகாக்க
  • தழும்புகளைக் குறைக்கும் கற்றாழை
  • முடி அடர்த்தியாக வளர
  • பொடுகுத் தொல்லை நீங்க
  • உச்சந்தலையில் முடி கொட்டுவதை தடுக்கும்
  • தலையில் புழுவெட்டு நீங்க
  • அழற்சி நீக்கும் கற்றாழை
  • நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க
  • பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை
  • புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை
  • மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை
  • பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு                                                              
  • முகப்பருவை தடுத்து அழகை மெருகேற்ற:

கற்றாழையின் ஜெல் உங்களது முகத் தோலில் படிந்துள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவுறச் செய்யும். மேலும், முகப்பருக்களை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை மற்றும் சிறு துளி எலுமிச்சை சாறு கலந்த கலவையினை பயன்படுத்தினால் சரும நோய்கள் நீங்கும். தழும்புகளை நீக்கும் குணங்களும் இதில் உள்ளது. எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை கலந்த கலவையானது முகப்பருக்களை வேருடன் அழிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.

தயாரிக்கும் முறை:

கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறினை நன்றாக கலக்க வேண்டும்அந்தக் கலவையினை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே இரவில் நல்ல பலனைக் காண முடியும்

சூரிய ஒளியில் இருந்து தோலை பாதுகாக்கும்:

கற்றாழை ஜெல்லானது சூரிய ஒழியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாக்கிறது. எரிச்சல் மிக்க பகுதிகளில் கற்றாழை ஜெல்லினை நேரடியாக பூசிக் கொள்வதன் மூலம் நற்பயன்களை அடையலாம். கற்றாழை ஜெல்லில் அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளது. இது புறஊதாக் கதிர்களிடம் இருந்து நம் சருமத்தினைக் காக்கிறது. சரும நோய்களுக்கும் இது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிகுந்த இந்த கற்றாழை ஜெல்லானது பலவிதமான சரும நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது.

காயங்கள் மற்றும் பூச்சிக்கடியில் இருந்து பாதுகாக்க:

கற்றாழை ஜெல்லில் உள்ள அதிகப்படியான நோய் எதிர்ப்புச் சக்தியானது நம் சருமத்தில் உள்ள அனைத்துவிதமான நோய்களையும் நீக்குகிறது.





தழும்புகளைக் குறைக்கும் கற்றாழை:

கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது காயங்கள் மற்றும் பூச்சிக் கடிக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும், கற்றாழை ஜெல்லின் மூலம் தயாரிக்கப்படும் கலவையானது சருமத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

தோல் சுருக்கம் மற்றும் முகத்தில் ஏற்படும் தழும்புகளுக்கும் மருந்தாக இந்த கற்றாழை ஜெல் பயன்படுகிறது. முக்கியமாக கர்ப்பிணி பெண்களுக்கு அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் தழும்புகளை குணப்படுத்த பயன்படுகிறது. இதனை பயன்படுத்தும் இடங்களில் சிறு எரிச்சல் ஏற்பட்டாலும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்புகள் மறையும்.

 முடி அடர்த்தியாக வளர(aloe vera helps to hair growth):

கற்றாழை ஜெல்லானது சரும பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, முடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பெரும்பாலும், அடர்த்தியான முடிகள் வளர இது உதவுகிறது. கற்றாழைஜெல் மற்றும் கடுகு எண்ணெய் கலந்த கலவையானது அடர்த்தியான முடி வளர பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல் மற்றும் கடகு எண்ணெய்யினையும் நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அந்தக் கலவையினை உச்சந்தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஓர் இரவு கழித்து தலையினை நன்றாக சேம்பு போட்டு கழுவுவ வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லானது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி அடர்த்தியான முடியினைப் பெற உதவுகிறது.

பொடுகுத் தொல்லை நீங்க: (aloevera helps to reduce dandruff):

இரசாயனம் அதிகமான சேம்புகளைக் காட்டிலும் கற்றாழை ஜெல்லானது உங்களது தலையில் உள்ள பொடுகுத் தொல்லைகளை எளிதில் நீக்கும். தலையில் பொடுகு ஏற்பட ஏராளமான காரணங்கள் உள்ளன. எண்ணெய் வழிந்த தலை, தலையில் அதிகப்படியான இறந்த செல்கள், சுகாதாரமின்மை, தொடர்ந்து தலையினை சுத்தமாக வைத்துக் கொள்ளலாமல் இருத்தல் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகும். கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் தீர்க்கும் குணாதசியங்களைக் கொண்டுள்ளது.

 உச்சந்தலையில் முடி கொட்டுவதை தடுக்கும்:

தலையில் ஏற்படும் அமிலத் தன்மையின் காரணமாக உச்சந்தலையில் முடிகொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலானோருக்கு இது அதிகப்படியாகவே காணப்படும் பிரச்சனையாகும். உச்சந்தலையில் மட்டும் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளை கற்றாழை ஜெல்லானது குணப்படுத்தும் மருத்துவத் தன்மைக் கொண்டுள்ளது. அதிக இரசாயனமிக்க சேம்புக்களை தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த தீர்வு கற்றாழை மட்டுமே. கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சுலபமாக தீர்க்கலாம்

தலையில் புழுவெட்டு நீங்க:

தலையில் ஏற்படும் புழுவெட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஜெல்லானது மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைமுடியின் வேரில் ஏற்படும் அலர்ஜிக்கு கற்றாழையே சிறந்த மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. கற்றாழை ஜெல்லினை தலை முழுவதும் தடவி, பின் சிறிது நேரத்திற்குப் பிறகு சேம்புக் கொண்டு கழுவுவதன் மூலம் புழுவெட்டில் இருந்து தலையினைக் காக்கலாம்.

கற்றாழையில் உள்ள புரதச் சத்துக்கள் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் பலவீனமான மற்றும் உதிர்ந்த முடிகள் நீங்கி புதியதாகவும், அடர்த்தியாகவும் முடிகள் வளர்கிறது.

 அழற்சி நீக்கும் கற்றாழை:

கற்றாழை சாறினை பருகுவதன் மூலம் உடலில் ஏற்படும் அழற்சி நீங்குகிறது. கற்றாழை சாறு தயாரிக்க தேவையானப் பொருட்கள். ஒரு கற்றாழை தண்டு, ஒரு டம்பள் தண்ணீர், ஒரு தேக்கரண்டி தேன்.

எவ்வாறு பயன்படுத்துவது

கற்றாழையின் மேல் தோலினை நீக்கி உள்ளே உள்ள கண்ணாடி போன்ற ஜெல்லினை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின், அதில் தண்ணீர் மற்றும் தேனைக் கலந்து மீண்டும் அரைத்து கலவையாக்கி கொள்ள வேண்டும்

பயன்படுத்தும் முறை:

இந்தக் கலவையினை அழற்சி மற்றும் பூச்சிக் கடித்த இடங்களில் தடவ வேண்டும்.கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது அழற்சி மற்றும் பூச்சிக் கடியின் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை விரைவில் குணப்படுத்தும்.

   நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி நீங்க:

இந்த கற்றாழை சாறானது நெஞ்செரிச்சல், அசிடிட்டி, நெஞ்சு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை தரும் கற்றாழை: 

கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பற்பசையானது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இந்த பற்பசையின் மூலம் பல் துலக்கினால் பற்கள் வலுப்பெறும். ஈறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். மேலும், வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம். இந்த பற்பசையினை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

3 தேக்கரண்டி கற்றாழை ஜெல்

5 தேக்கரண்டி சமையல் சோடா உப்பு

5 தேக்கரண்டி வெஜிடபில் கிளசரின்

புதினா

யூக்கலிப்டஸ் எண்ணை

கண்ணாடிப் பாத்திரம்

செய்முறை:

முதலில் கற்றாழை ஜெல்லினை சமையல் சோடா உப்புடன் நன்றாக சேர்க்க வேண்டும். பின், கிளசரின் மற்றும் புதினா சேர்த்து கண்ணாடிப் பாத்திரத்தில் நன்றாகக் கலக்கவும். பிறகு அதனுடன் யூக்கலிப்டஸ் எண்ணை சேர்த்து கலக்கியப்பின் சிறிது நேரத்தில் உங்களுடைய ஆரோக்கியமான பற்பசை தயாராகி விடும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கற்றாழை:

கற்றாழையானது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்கிறது. மேலும், இரத்த அணுக்களில் புதிய செல்களை ஊக்குவிக்கிறது. மேலும், கற்றாழையிலிருந்து கிடைக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு மற்றும் சைட்டோகின்கள் மூலம் உங்களது நோய் எதிர்புச் சக்திகளை அதிகரிக்க செய்கிறதுs

 

புற்றுநோயைத் தடுக்கும் கற்றாழை:

கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது புற்று நோயை உருவாக்கும் செல்களை அழிக்கும் தன்மைகளையும் கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது நேரடியாக புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.

மூலப்பிரச்சனையை தடுக்கும் கற்றாழை:

மூலப் பிரச்சனைகளுக்கு கற்றாழை அருமருந்தாகப் பயன்படுகிறது. குறிப்பாக வயது முதிர்வு காரணமாக ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு கற்றாழையில் உள்ள குறிப்பிட்ட அமிலத் தன்மையானது சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு:

பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும்.

 


டிப்ஸ்( Tips) :

இந்த கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள், தேன், பால், ரோஸ்வாட்டர்  சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை சுமார் 20 நிமிடங்கள் முகம், கழுத்தில் தேய்த்துக்கொள்ளலாம். பின்னர் முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுகிவினால் வெயிலினால் உண்டான கருமை நீங்கி சருமம் பிரகாசமடையும்.

சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

Buy Organic Aloe Gel from Our Podhigaihers.com link below:

https://www.podhigaiherbs.com/product/210/rose-powder-rose-flower-powder-50-gram.html 











கருத்துரையிடுக

0 கருத்துகள்