Hot Posts

6/recent/ticker-posts

காலை நேரக் கரிசாலை பானம்!

 




காலையில் பல் துலக்கிய பின்னர் மஞ்சள் கரிசாலை இலைகளை நன்கு மென்று தின்றுவிட்டு, அதன் சாரம் உள்ளே போகும்படி அண்ணாக்கில் தேய்க்கவும், பிறகு வாய் கழுவவேண்டும். இது சித்தர்கள் கடைபிடித்த வழலை வாங்கும் முறை (உடலில் படிந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் முறை) இதை வடலூர் அருட்பிரகாச வள்ளலார்தான் உலகுக்கு அறிவித்தார்.

சித்தர்களுக்கு இதெல்லாம் முடியும், நம்மால் செய்யமுடியுமா என்று மலைப்பவர்கள், பின்வரும் காலை பானத்தைச் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம்.

உலர்ந்த மஞ்சள்கரிசாலை இலை – 100 கிராம்

உலர்ந்த முசுமுசுக்கைஇலை   - 25 கிராம்

உலர்ந்த தூதுவளைஇலை  - 25 கிராம்

சீரகம் – 25 கிராம்

மேற்கண்ட அனைத்துபொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொதிகை ஹெர்பல் (www.podhigaiherbs.com) இனையதளத்தில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தும் வாங்கலாம். ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஒரு மெல்லிய சீலைத்துணியில் வடிகட்டி காற்றுப் புகாத ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். காலையில் இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி (5கிராம்) எடுத்தி 100 மில்லி தண்ணீர் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாட்டு சக்கரை சேர்த்து குடித்து வரலாம்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இரைப்பு (ஆஸ்துமா) மூக்கடைப்பு முதலிய நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். நரம்புத்தலர்ச்சி நீங்கி உடலும் உள்ளமும் வலிமை அடையும்.

நமது நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமாகி இன்று அனைவரது வீடுகளிலும் நிறைந்து இருக்கும் காபி, தேநீர்க்குப் பதிலாக் இந்த காலை பானத்தை பழக்கப்படுத்திப் பார்க்கலாம்.

Link to Buy : மஞ்சள்கரிசாலை 

                      முசுமுசுக்கைஇலை 

                     தூதுவளைஇலை


#manjalkarisalai, #Falsedaisy #Healthbenefits #podhigaherbs #podhigaiblogs #Tamilmedicine #Siddharkal #Tamilancientmedicine #musumusukkai #herbalpowders








கருத்துரையிடுக

0 கருத்துகள்