Hot Posts

6/recent/ticker-posts

இது இருந்தா போதும் உங்களுக்கு சர்க்கரை வியாதியே வராது…! 8 /40

 


குறிஞ்சா கீரை 



எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக்கொடி இனம் இது. மரங்களில் கொடியாகப் படரும். முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. இலை பித்தம் பெருக்கும். தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது.

சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இது அதிகமாக பயன்படுகிறது.. கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிஞ்சாக் கீரை இரண்டு வகைப்படும். அவை சிறுகுறிஞ்சான், பெருகுறிஞ்சான். இவை தானாகவே வளரும் இயல்புடையது.

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு

Read About : அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ குணங்கள்

குறிஞ்சாக் கீரையின் மருத்துவ பயன்கள்:

1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முக்கிய உணவாக கருதப்படுவது குறிஞ்சாக்கீரை. சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் இருக்க குறிஞ்சாக்கீரை சிறந்த மருந்தாகும். சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.


2. வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும். வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் எடை குறைய குறிஞ்சாக்கீரை உதவுகிறது.

3. குறிஞ்சாக்கீரை சளியினை போக்கும் தன்மை உடையது .வயிற்று வலியினை போக்கிறது. குளுமைப்படுத்தும் திறன் கொண்டது.

4. குறிஞ்சாக்கீரை சிறுநீர் போக்கினை தூண்டும் தன்மை மிகுந்தது. நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்க உதவிகிறது. உடல் சூடு தணிய செய்யும்.


5. எல்லா விதமான விஷகடிக்கும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டி, கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

6. கடுமையான ஜூரம் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் ஜூரம் குறையும்.

7. குறிஞ்சாக் கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

8. உடலில் உண்டாகும் தடிப்புகள், சொறி, படை இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். வண்டு, பூரான், செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் வரும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு 5 வைத்து அரைத்து சுண்டக்காய் பிரமாணம் இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

Read About : எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா சூரணம்

 இரவில் குறிஞ்சா கீரையை சுடு தண்ணீரில் போட்டு அதனுடன் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் அந்த கசாயத்தை குடித்தால், இரண்டே நாட்களில் குடற்புண்கள் முற்றிலும் நீங்கும். வாரத்திற்கு இரண்டுமுறை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். கிராமத்தில் உள்ள பலருக்கும் இந்த கீரையை பற்றி தெரிந்திருக்கும். இதனை அனைவரும் பயன்படுத்தி மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்போம்!

இது போன்று மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட கீரை வகைகள் மற்றும் அதன் பயன்களை தெரிந்துகொள்ள நம் பொதிகை வலைதளத்தில் இனைந்திருங்கள்.

உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்றும் நம் சுற்றுசூழலுக்கு ஏற்ற ஈகோ ப்ரெண்ட்லி(Eco Friendly) பொருட்களை, நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள்.

https://www.podhigaiherbs.com/product/241/immune-care-combo-pack.html 

 To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

 #organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை #Eco_Friendly_Product #Bamboo_water_bottle #Bamboo_Cup

கருத்துரையிடுக

0 கருத்துகள்