Hot Posts

6/recent/ticker-posts

கொரோனா பெருந்தொற்றில் உங்களை தற்காத்துக்கொள்ள அதிமுக்கியமான மூலிகை பெட்டகம்



கொரோனா பெருந்தொற்றின் மிக முக்கியக்கட்டத்தில் இருக்கின்றோம் , இந்த சூழலில் நாம் அரசின் வழிமுறைகளை ஏற்று தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது , முகக்கவசம் அணிவது , மிக மிக தேவை , அத்தியாவசியம் என்றால் மட்டுமே வெளியே செல்வது என்பதை மிக கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இப்பெருந்தொற்று காலத்தில் நாம் நம்முடைய உள்ளத்தையும் உடலையும் உறுதியாக வைத்துக்கொள்ளவேண்டியது மிக அவசியம். நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் , கொரோனா பெருந்தொற்று நம்மை அண்டாமல் பாதுகாத்து கொள்ளவும் பொதிகை ஹெர்பல்ஸ் வழங்கும் மிக முக்கிய பாதுகாப்பு பெட்டகம் நம் ஒவ்வொருவரின் இல்லங்களிலும் இருக்க வேண்டியது மிக அவசியம்.


 

பாதுகாப்பு பெட்டகத்தின் உள்ளடக்கம் :
கப சுர குடிநீர் - 100கிராம்
ஆடா தோடா மணப்பாகு - 100கிராம்
தாளிசாதி சூரணம் மாத்திரை - 100 எண்ணிக்கை
நெல்லிக்காய் லேகியம் - 200 கிராம்

இதன் ஒவ்வொன்றின் பயன்கள் மற்றும் அவற்றை எவ்வளவு உண்பது குறித்து காண்போம்
 
கப சுர குடிநீர் - அதி அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த 15 வகை மூலிகைகளைக் கொண்டது கப சுர குடிநீர். அனைத்து விதமான சுவாசகோளாறுகளுக்கும் ஏற்றது. இருமல், சளி, சுரம், வறட்டு இருமல், ஆஸ்துமா, தொண்டைக்கட்டு மற்றும் அனைத்து வித சுவாசகோளாறுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அழற்சியைப் போக்கி அனைத்து வித சுரங்கள் மற்றும் ஆஸ்துமாவைப் போக்கும்குணங்களைக் கொண்டது. வைரஸ் கிருமிகளை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் ஆற்றல் நிறைந்தது.

ஆடாதோடை மணப்பாகு - ஆடாதோடை மணப்பாகு அனைத்துவித சுவாச கோளாறுகளுக்கும் பாரம்பரியமான சித்தமருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டது. கோழையை அகற்றி, மார்புசளியினால் ஏற்படும் மூச்சுத்திணறலை போக்கி சுவாசத்தை சீர்செய்கிறது. சளி, இருமல், பலவித சுரங்கள் மற்றும் கபகோளாறுகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கக்கூடியது. இனிப்புசுவை கொண்ட ஆடாதோடை மணப்பாகு குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது.

தாளிசாதி மாத்திரை - தாளிசாதி சூரணம் மாத்திரை பாரம்பரியமான சித்த வைத்திய முறையில் சிறப்புற தயாரிக்கப்பட்டு அனைத்து வித சுவாசகோளாறுகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. சளி, இருமல் ஆஸ்துமா, மூச்சிரைப்பு, தொண்டைக்கட்டு மற்றும் சுவாச கோளாறுகளினால் ஏற்படும் சுரத்தை போக்கக்கூடியது. மேலும் வயிற்று உப்பிசத்தைப் போக்கி பசியைத் தூண்டக் கூடியது. தாளிசாதி மாத்திரை சுவாசக்குழலில் ஏற்படும் சளி, சுரப்புகளை நீக்கி, மூச்சுக்கு குழாயில் ஏற்படும் அடைப்புகளை போக்கி, ஜீரணத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு அருமருந்தாகும்.

நெல்லிக்காய் லேகியம் - கீல்வாதம், பித்தம், மஞ்சள் காமாலை, நீரிழப்பு, வாய்வு, இரத்த சோகை, நீரிழப்பு, குமட்டல், உடல் எரியும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
 

 
எப்படி பயன்படுத்துவது 

கபசுரக் குடிநீர் - 10 கிராம் பொடியை 250மிலி தண்ணீரில் கொதிக்க வைக்கவும். 30மிலி முதல் 60மிலி வரை ஆனதும் வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறைகள் உணவிற்கு முன் குடிக்கவும்.

ஆடாதோடை மணப்பாகு - 5மிலி முதல் 10மிலி எடுத்து வெந்நீரில் கலந்து காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

தாளிசாதி சூரணம் மாத்திரை - 1 அல்லது 2 மாத்திரை எடுத்து ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வேளை சப்பி சாப்பிட வேண்டும்.

நெல்லிக்காய் லெஜியம் - 5-10 கிராம் என்ற விகிதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.












·

கருத்துரையிடுக

0 கருத்துகள்