Hot Posts

6/recent/ticker-posts

வல்லாரையின் பயன்கள்

 

வல்லாரை இலையை உணவாக எடுத்துகொண்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.ஒவ்வொருமுறையும் தேடி வல்லாரை இலையை வாங்கி பக்குவமாக சமைப்பது சிரமமாக உள்ளது என்பவர்கள் இதை பொடியாக்கி வைத்துகொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தலாம். வல்லரை பொடியை நீண்ட காலம் வைத்திருக்க பக்குவமாக தயாரிக்க வேண்டும். வல்லாரை பொடி எப்படி தயாரிப்பது என்பது குறித்து தனிப்பதிவில் காண்போம். ISO தரத்துடன் தயாரிக்கப்படட தூய்மையான தரமான வல்லாரை பொடி பொதிகை இணையதளத்தில் கிடைக்கிறது   https://www.podhigaiherbs.com/product/217/vallarai-podi-brahmi-leaves-powder-zip-pouch-50-gram.html 

வல்லாரையின் பயன்கள் மற்றும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்ப்போம்:


காய்ச்சல் தீவிரமாகும் இருக்கும் போதே வல்லாரையை உணவில் சேர்த்துவந்தால் காய்ச்சல் படிப்படியாக நீங்கும்.
மலச்சிக்கல் இருக்கும் போது வல்லாரை பொடியுடன் அதிமதுரம் தூளை சேர்த்து மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும் தேவையெனில் நாட்டுசர்க்கரை அல்லதுதேன் கலந்துகுடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலம் இளகி வெளியேறும். ஆசனவாய் கடுப்பு இருந்தாலும் நீங்கும்.



குழந்தைகள் வயிறு வலி என்று அழும்போது வல்லாரை தூளுடன் சோம்பை தூள் செய்து கலந்து தேனில் குழைத்து கொடுக்கலாம். அரை டீஸ்பூன் வல்லாரை பொடியுடன் கால் டீஸ்பூன் சோம்பு கலந்து தேன் அல்லதுநாட்டுச்சர்க்கரை குழைத்து வாயில் தடவ வேண்டும். மூன்று வேளையும் இதை கொடுத்தால் வயிறுவலி காணாமல் போகும்.




கண்பார்வை மந்தமாக இருந்தால் வல்லாரையை மருத்துவ குணத்துக்கு பயன்படுத்தலாம். குறிப்பாக சூரிய ஒளி மறையும் நேரத்தில் கண் பார்வை மங்குவதை தெளிவாக உனரும் போது வல்லாரை இலையை அம்மியில் அரைத்து கொட்டைப்பாக்களவு உருட்டி ஒரு டம்ளர் பசும்பாலில் காலை குடித்துவந்தால் குறைபாடு நீங்கும். தொடர்ந்து 11 நாட்கள் வரை இதை குடிக்க வெண்டும். பலன் தெரியும். குறைபாடு அப்படியே இருந்தால் மீண்டும் 11 நாட்கள் குடிக்கலாம். இது ஆரம்ப கட்டமாக இருந்தால் பூரணமாக குணமாகும். வல்லாரைக்கீரை தினமும் கிடைக்காதவர்கள் இந்த பொடியை பாலில் கலந்து குடிக்கலாம்.


வயிற்றுப்புண் இருந்தால் அது வாய்ப்புண்ணில் காண்பிக்கும் என்று சொல்வார்கள். வாய்ப்புண் இருக்கும் போது எதையும் சாப்பிட முடியாது. இவர்கள் வல்லாரை தூளை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து நாக்கு, வாயில் தடவி விடவேண்டும். ஒரு பத்து நிமிடம் ஆகும் வரை தண்ணீர் கூட குடிக்க கூடாது. அவை உமிழ்நீரோடு தொண்டையில் இறங்கும். அது வயிற்றில் இருக்கும் புண்ணையும் ஆற்றக்கூடியது.

வயிற்றுப்புண் இருக்கும் போது வல்லாரை தூள்சேர்த்த சாதம் சாப்பிடலாம். உதிரான சாதத்தில் நெய், வல்லாரைதூள், கால் டீஸ்பூன் சீரகத்தூள், உப்பு கலந்து பிசைந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும். தொடர்ந்து 5 நாட்கள் வரை இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வயிற்றுப்புண் போன்று குடல் புண்ணையும் ஆற்றூம் மருந்து இது.

இட்லி மாவில் கலந்து தோசையாக வார்க்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேங்காய், வெல்லப்பொடி கலந்து தோசை சுட்டு கொடுக்கலாம். அருமையாக இருக்கும். வல்லாரை குழந்தைகளுக்கு அதிக நினைவுத்திறன் கொடுக்க கூடியது. மூளை நரம்புகளை மேன்மைப்படுத்தும்.


வெரிகோஸ் என்று சொல்லகூடிய பாதிப்பை தடுஅக்க உதவும். வல்லாரையில் இரும்புச்சத்து இருப்பதால் இவை ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.

வல்லாரை மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகை . வீட்டில் காய்ச்சல் காலங்களில் பயன்படுத்தவேண்டிய பொருள் என்பதால் எப்போதும் வீட்டில் வைத்திருங்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Click here to Buy 

கருத்துரையிடுக

0 கருத்துகள்