50 வயதுள்ள 215 mg/dL நீரிழிவு நோய் (டயாபடீஸ்) கொண்ட ஒருவருக்கு, இயற்கை வழியில் 140 mg/dL-க்கு கீழே கொண்டு வந்து கட்டுக்குள் வைப்பது எப்படி? அலோபதி மருந்துகளுடன், தீர்வை துரிதப்படுத்த, பாதுகாப்பான இயற்கை வழிமுறைகள் ஏதும் பரிந்துரைக்க இயலுமா?
எனக்குத் தெரிந்த, கேள்விப்பட்தை குறிப்பிடுகிறேன்.எந்த அளவில் பயனளிக்கும் என்பதற்கு நடைமுறையிலேயே தெரியவரும்.
கருப்பு கவுனி அரிசி
சிறுதானிய உணவுகளில் கருப்பு கவுனி அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக கூறப்படுகிறது. ஒரு வேளை இவ்வரிசியை உணவாகக் கொண்டால் நன்றாக இரத்த சர்க்கரை அளவு குறைவதாக, உறவினர் கூறினார். மருத்துவ நிபுணர்களும்
டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்றும், இதிலுள்ள நார்ச்சத்து இதற்கு உதவுவதாகக் கூறுகின்றனர்.
சிறுகுறிஞ்சான் பொடி.
சிறுகுறிஞ்சான் பொடியை நீரில் கலந்து குடித்து வர நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். இதற்கு சர்க்கரைக் கொல்லி மருந்து என்றே குறிப்பிடுகிறார் உறவினர்.அவர் தினமும் இந்த பொடியை ஒரு சிட்டிகை அளவு, அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்து விட்டு, நடைப்பயிற்சிக்கு செல்வாராம்.
கொய்யா இலை:
அதேபோல், கொய்யா இலைகளை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தலும் நலம் பயக்கும். இருநேரமும் தவறாத நடைப்பயிற்சி.
பாகற்காய் சாறு:
தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்தி வரலாம். பாகற்காயில் கீரையை விட அதிக அளவு கால்சியமும்
இரும்புச் சத்தும் போதுமான அளவு பீட்டா கரோட்டின் இருப்பதால் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள்
இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி டைப்-2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
பட்டை:
பட்டை உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும் எனவே டைப் 2 சர்க்கரை நோயாளிகள் பட்டையை உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு சமநிலை ஆகும்.
பட்டை பொடி, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், உடலில் இரத்த சர்க்கரை அளவு மட்டுப்படும்.
நாவல் கொட்டை
நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி, இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது.நாவல்கொட்டையை பொடியாக்கி தினமும் குடித்து வந்தால் நலமுண்டாகும்.
வெந்தயம்
தினமும் ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை ஊற வைத்து அந்த நீரை அருந்த வேண்டும்.ஊறவைத்த வெந்தயத்தையும் சாப்பிட்டு வரலாம்.இது என் தோழி கடைபிடிப்பது.
நார்ச்சத்து மிகுந்த கீரைகள், பச்சை காய்கறிகள், பழங்களில் எலுமிச்சை, பப்பாளி போன்ற வற்றை எடுத்துக் கொள்ளலாம்.
உணவை அளவோடு உட்கொள்வதால், சீக்கிரம் பசியெடுக்கும்.அப்போது காய்கறிகள் கலவையில், எலுமிச்சை சாறு கலந்து உண்ணலாம்.
சுரைக்காய் உடன் நெல்லிக்காய் கலந்து சாறெடுத்து குடிக்கலாம்.நோய்எதிர்ப்புச்சக்தியோடு, இரும்புச் சத்தும், வைட்டமின் சி சத்தும் கிடைக்கும்.
சமையலிலும், புளியைக் குறைத்து, எலுமிச்சையைப் பயன்படுத்தலாம்.
சவ்சவ் காயையும் மிக்சியில் அரைத்து வடிகட்டி, சாறெடுத்துக் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு குறைவதாக, நீரிழிவு பரிசோதனை எடுக்க வந்த (லேப் டெக்னீஷியன்)
பரிசோதனைக் கூடத்தில் பணிபுரியும் நபர் கூறியதாக பக்கத்து வீட்டினர் கூறினர்.முயன்று பார்க்கலாம்.
ஆரோக்கிய வாழ்விற்குத்
தேவையான அனைத்து வகை உணவுகளையும் அளவோடு உண்டு, இனிப்பு வகைகளை தவிர்த்து, நடைப்பயிற்சி மேற்கொள்வது,
நீரிழிவு நோயாளிகளுக்கு
அவசியமான ஒன்றாகும்
0 கருத்துகள்