Hot Posts

6/recent/ticker-posts

குமட்டிக்காய் மருத்துவ பயன்கள்


குமட்டிக்காய் அல்லது குமிட்டிகாய் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம்.
இதை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்ம்பேய்கும்மட்டி என்ற வேறு பெயர்களிலும் அழைப்பர்.
இவை களைகளாய் விளைநிலங்களில் காணப்படுகின்றன.
இதன் தாயகம் மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம் காணப்படுகிறது.
தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் வளர்கிறது.
மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி.
குமட்டிக்காய்: பண்புகள்
இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவையுடையது
பச்சை, வெள்ளை நீள வரிகளையுடைய காய்களாகும்.
இதன் காய்கள் சிறிய பந்து போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும்.
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
குமட்டிக்காய்: பயன்கள்
சித்த மருத்துவத்திலும்,
வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகின்றது. இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும்.
முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, புழுவெட்டு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு, வழுக்கு குமிட்டி காய் பூரண குணமளிக்கும்.
இதன் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும்
கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும்.
வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.
புழு வெட்டு, பொடுகு ஆகியவற்றால் விழுந்த சொட்டை தலையில்,

வழுக்கு குமட்டி காயின் சாற்றை தேய்த்தால் மீண்டும் முடி முளைக்கும். 


மேலும் பல்வேறு வகையான மூலிகைகள் பற்றி அறிய தொடர்ந்து நம்முடைய வலைப்பக்கத்தில் இணைந்து இருங்கள். உங்களுக்கு தேவையான நாட்டு மருந்து மாற்று இதர மருத்துவ பொருட்களை  , நமது பொதிகை ஹெர்பலிஸில் மிக எளிதாக ஆன்லைனில் வாங்கி பயன்பெறுங்கள் 

To order log in to www.podhigaiherbs.com

அனைத்து விதமான மூலிகைகள் நாட்டு மருந்துகள் ,இயற்கையான பொருட்களை ஆன்லைன்ல வாங்க

#organic #herbal #herbs #fit #healthy #safe #nutritious #ayurvedic #fresh #refresh #India #மூலிகைபொருள்கள் #மூலிகை #பொதிகை_ஹெர்பல்ஸ்  #நாட்டுமருந்துகடை

கருத்துரையிடுக

0 கருத்துகள்