Hot Posts

6/recent/ticker-posts

ஏன் குப்பைமேனி சோப் பயன்படுத்தவேண்டும்

 



குப்பைமேனி சருமத்துக்கு செய்யும் நன்மை குறித்து தெரிந்துகொள்வோம். மூலிகைகளில் முக்கியமானது குப்பை மேனி. சாதாரணமாக கிடைக்க கூடிய இவை கற்ப மூலிகைகள் என்றும் அழைக்கப்படுகிறது. குப்பை மேனி இலை கிடைக்க கூடாத பொருளும் அல்ல, இவை எளிதாக கிடைக்க கூடிய பொருளும் கூட என்பதால் இயற்கை அழகை விரும்புபவர்கள் குப்பை மேனியை மேனி அழகாக்க பயன்படுத்தலாம். எப்படி என்பதை பார்க்கலாம்.

 


இளம்பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வரக்கூடும். குறிப்பாக உதட்டின் மேல், தாடையில் முடிகள் இருக்கும். சிலருக்கு உற்று நோக்கினால் தெரியும். சிலருக்கு வெளிப்படையாகவே முடி வளர்வது பார்க்கமுடியும்.

குப்பை மேனி இலை 10 எடுத்து விரலி மஞ்சளை சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கி, இரவு தூங்கும் போது முகத்தில் தடவி கொள்ளவும். மறுநாள் காலை உலர்ந்து அவை முடியோடு உதிர்ந்து வெளியேறும்

தொடர்ந்து இரண்டு வாரங்கள் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடி உதிர்வதை பார்க்கலாம். குப்பைமேனி இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எனினும் பொடியை தாண்டி இலை வேகமாகவே பலன் தரும்.

பருக்கள் நீங்கும்:



பருக்களுக்கு பச்சிலை வைத்தியம் எப்போதுமே கைகொடுக்கும். பச்சிலையிலும் நல்ல தீர்வை கொடுப்பதில் குப்பைமேனிக்கு தனி இடம் உண்டு.

முகத்தில் பருக்கள் அதிகமாகும் போது அவை சருமத்தில் தழும்புகளை உண்டாக்கிவிடவும் செய்யும். பருக்கள் முகத்தின் அழகை சீர்குலைக்க செய்யும். முகப்பருக்கள் சமயத்தில் புண்ணை உண்டாக்கிவிடும்.

சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பருக்கள் உண்டாக கூடும். இந்நாளிலும் குப்பை மேனியை பயன்படுத்தலாம். பாதிப்பில்லாமல் இருக்கும்.

குப்பை மேனி இலையுடன் கற்றாழை ஜெல் கலந்து இரண்டையும் மசித்து சிட்டிகை மஞ்சள் சேர்த்து முகப்பருக்கள் இருக்கும் இடங்களில் பற்று போட வேண்டும். அவை உலர்ந்ததும் முகத்தை மந்தமான நீரில் கழுவினால் முகத்தில் பருக்கள் குறைய தொடங்கும்.

அம்மை தழும்புகள், புண்கள், வடுக்கள்



சிலருக்கு முகத்தில் அம்மை தழும்புகள் இருக்கும். சிலருக்கு முகப்பருக்களால் புண்கள் உண்டாக கூடும். இந்த புண்கள், வடுக்களை நீக்குவதில் குப்பை மேனி பயன்படுத்தலாம்.

குப்பை மேனி இலையை இடித்து அதில் மஞ்சள், கற்றாழை ஜெல், ஒரு பல் பூண்டு சேர்த்து மசிய அரைத்து முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து தடவி வந்தால் முகத்தில் தழும்புகள், புண்கள், வடுக்கள் குணமாகும்.

அரிதாக சிலருக்கு பருக்கள் புண்களை உண்டாக்கி சீழ் வரை கொண்டு செல்லும் இவர்கள் குப்பைமேனி இலையுடன் துளசி, வேப்பிலை, மஞ்சள், ஒரு கல் உப்பு சேர்த்து மசித்து தடவி வந்தால் புண்கள் குணமடையும்.

சருமம் பழைய தோற்றத்தை பெறும். இவை முகத்தில் மட்டும் அல்ல, உடல் முழுக்க எங்கு சருமப் பிரச்சனை இருந்தாலும் இதை செய்தால் மேனி முழுக்க பளபளப்பாக இருக்கும்.

ஹெர்பல் ஃபேஷியல்



குப்பை மேனி இலைகளை கொண்டு முகத்துக்கு ஃபேஷியலும் செய்யலாம்.

தேவை

குப்பை மேனி இலை - 15

புதினா - 15 இலைகள்

துளசி - சிறிதளவு,

வேப்பிலை - 5

கெட்டி பசுந்தயிர் - சிறிதளவு அல்லது பசும்பால்,

வைட்டமின் ஆயில் மாத்திரை - 1

இலைகளை சுத்தம் செய்து மிக்ஸியில் மைய அரைக்கவும். அரைத்த கலவை உடன் தயிர் சேர்த்து மசிய அரைத்து, வைட்டமின் ஆயில் மாத்திரை கலந்து குழைக்கவும். பிறகு முகத்தை சுத்தம் செய்து முகம் முதல் கழுத்து வரை பேக் போடவும். 30 நிமிடங்கள் வரை உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

புதினா வைட்டமின் சி நிறைந்தது என்பதால் இவை சருமத்தை சுருக்கமில்லாமல் பொலிவாக வைக்க உதவுகிறது. குப்பை மேனி இலை முகத்தில் கரும்புள்ளிகள் இல்லாமல் செய்கிறது. முகத்தில் பருக்கள் வருவதையும் புண்களையும் வராமல் செய்கிறது. தயிர் இயற்கை ப்ளீச் போன்று செயல்பட்டு முகத்தை சுத்தமாக்குகிறது.

மாதம் இருமுறை இதை செய்துவந்தால் முகத்தில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும். சருமத்தில் மட்டும் அல்ல, கூந்தலுக்கும் இவை பலவிதமான நன்மைகளை செய்யும். இது குறித்து தனியாக பார்க்கலாம்.

இயற்கையாக அழகை பராமரிக்க வேண்டும் என்று விரும்பினால் குப்பை மேனி உங்கள் மேனியை நன்றாகவே பராமரிக்க உதவும்.

இவ்வளவு சிறப்பு மிக்க குப்பைமேனி தற்போது பயன்படுத்த எளிதாக குளியல் சோப்பாகவும் வருகிறது. எந்த ரசாயனமும் கலக்காமல் கைகளினாலே செய்யப்பட குளியல்  சோப்பை இங்கு நீங்கள் ஆன்லைனில் வாங்கி பயன்படுத்தலாம்.

Kuppaimeni Soap 50g

👇👇👇👇


@




கருத்துரையிடுக

0 கருத்துகள்