இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை பயன்படுத்துவது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இன்றைய இளம் பெண்கள் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தீர்வாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.இவை அனைத்தும் செயற்கை வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கக் கூடும். அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும்.
நலுங்கு மாவில் சேர்க்கப்படும் மூலிகைகள்:
·
கஸ்தூரி மஞ்சள்-
250 கிராம்
·
மஞ்சள் கிழங்கு
-200 கிராம்
·
பூலாங்கிழங்கு- 100 கிராம்
·
ரோஜா பூ-100
கிராம்
·
ஆவாரம் பூ-100
கிராம்
·
செண்பக மொட்டு-50
கிராம்
·
கார்போக அரிசி-
100 கிராம்
·
கோரை கிழங்கு-
50 கிராம்
·
வெட்டிவேர்- 25 கிராம்
·
மலை நன்னாரி-100
கிராம்
·
பூஞ்சாந்து பட்டை-
50 கிராம்
·
திருமஞ்சன பட்டை-
100 கிராம்
·
மரிக்கொழுந்து- 50 கிராம்
·
மருவு- 50 கிராம்
·
பச்சிலை- 50 கிராம்
·
வசம்பு- 25 கிராம்
·
கல்பாசி- 50 கிராம்
·
அதிமதுரம்-50 கிராம்
· லவங்க பத்திரி இலை -25 கிராம்
நலுங்கு மாவு தயாரிக்கும் முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அரைக்க வேண்டும் Click Here to buy. வாங்கி நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும். பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். குளியல் பொடியை அரைக்கும் மெஷினில் அரைக்க வேண்டும்.ஏனென்றால் மசலா பொருட்களை அரைக்கும் மெஷினில் நலங்கு மாவினை அரைக்கும் பொழுது உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.
உங்களுக்கு மேலே உள்ள பொருட்களை கடையில் வாங்கி அரைப்பதற்கு நேரமில்லையா? கவலை வேண்டாம். பொதிகை ஹெர்பல்ஸின் தயாரிப்பான இயற்கை மூலிகைகள் கலந்த நலுங்கு மாவை எளிதாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே அனுப்பு வைக்கின்றனர்.
நலங்கு மாவு உபயோகிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
·
சருமத்திலிருக்கும் அதிகப்படியான எண்ணெய்பசையை நீக்குகின்றது.
·
குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.
·
தோலை பளபளப்பாக்கும்.
·
சருமத்தின் அமிலத்தன்மையை நிலைப்பாட்டில் வைக்கின்றது.
·
இதில் கலந்துள்ள மஞ்சள் முகத்திலுள்ள மாச, மரு நீக்கி தோலுக்கு ஊட்டமளிக்கும்.
·
உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.
·
வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.
·
வியர்க்குரு தொல்லையும் இருக்காது.
·
இதை தினமும் பூசி வர உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை தடுக்கும்.
·
நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.
நலங்கு மாவினை யார் உபயோகிக்கலாம்?
· குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகிக்கலாம்.ஆண் குழந்தைகளுக்கு தேவையான மாவினை தயாரிக்கும் பொழுது மஞ்சளை தவிர்க்கவும்.ஏனென்றால் மஞ்சள் உடலிலுள்ள ரோமங்களை நீக்கும். அதற்கு பதிலாக பாசி பயிரினை உபயோகிக்கலாம்.பெண் குழந்தைகளுக்கு தயாரிக்கும் பொழுது
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் பயன்படுத்தலாம்.
· முதல் முதலாக உபயோகிக்கும் பொழுது பேட்ச் டெஸ்ட் செய்து பின் உபயோகிக்க வேண்டும்.நலங்கு மாவு பொதுவாக தோலுக்கு பக்க விளைவினை ஏற்படுத்தாது.எனினும் குழந்தைகளுக்கு பயன்படுத்தும்பொழுது சோதனை செய்த பின்பு உபயோகிப்பது நன்று.
·
நலங்கு மாவு பொடியை உபயோகிக்கும்
முறை:
· நலங்கு மாவு பொடியினை சிறிது தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.உடலில் தேய்த்து 5 நிமிடம் ஊறவைத்து பின்பு குளிக்க வேண்டும். தண்ணீர்
சேர்க்காமல் உடலில் தேய்த்த
பின்பும் குளிக்கலாம்
நலங்கு மாவு பேஸ் பேக் தயாரிக்கும் முறை:
· நலங்கு மாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
· ட்ரை ஸ்கின்னாக இருந்தால் தயிர் அல்லது பாலாடை சேர்த்து கலக்கி முகத்தில் பூசவும்.
· நார்மல் ஸ்கின்னாக இருந்தால் தேன் கலந்து தேய்க்கலாம்.
· 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு கழுவவும்.
தொடர்ந்து உடல் நலன் மற்றும் மூலிகைகள் குறித்து அறிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் பக்கத்தில் இணைந்திருங்கள்
நன்றி
0 கருத்துகள்